Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நட்சத்திர கிரிக்கெட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகனின் கடிதம்

சமீபத்திய அரசியல் பிரச்சாரங்கள், கூட்டணி மாற்றம், வேட்பாளர் பட்டியல் என்று அரசியல் செய்திகள் பரபரக்கும் சூழ்நிலையில் அதற்கு இணையாக மற்றுமொரு பிரச்னை உருவெடுத்து, மக்களிடையே பேசுபொருளாக உருமாறியிருக்கிறது. அது  நட்சத்திர கிரிக்கெட். நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட மக்களிடம் பணம் வாங்குவது குற்றம் என்பது வெகுஜன மக்களின் பார்வையாக இருக்கிறது. இது தொடர்பாக வலைதளங்களில் நாள்தோறும் எதிர்ப்புக் கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  

27 கோடிரூபாயில் நடிகர்சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு, நடிக, நடிகைகளை வைத்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தி, அதில் வரும் பணத்தில் சங்க கட்டிடம் கட்டுவதே, புதிதாக பொறுப்பேற்ற நடிகர் சங்க குழுவின் முடிவு. இதற்கு ஆதரவுகளை விட, வெகுஜன மக்களின் எதிர்ப்பு அலைகள் தான் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இழகுவாக இணையத்தில் எந்த செய்தியும் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், ரசிகர்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அதன்படி, இணையத்தில் அதிகமாக சேர் செய்யப்பட்ட ஒரு சாதாரண ரசிகனின் கருத்து இதோ இங்கே....,

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

* மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

* மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

* மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

* நம்‬ அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.

* ‎ஒரு‬ நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை. படப்பிடிப்புதளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கைகடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு. ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய்சம்பாதித்து10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள். பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காகத் தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது. நிற்க. மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்றுவெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற பவருகிறார்கள். ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திரகிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா?”

-என்று முடித்துள்ளார் அந்த ரசிகன்.

இதுவே நட்சத்திர கிரிக்கெட் பற்றியான இன்றைய ரசிகர்களின் பார்வையாக இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்