Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்!

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார் அட்லீ. அப்படம் இரண்டு தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. ராஜா ராணியின் காட்சியமைப்பும், கதையுமென அப்படத்தை ரசிக்காத மக்களே இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்திய புதுத் தகவலாக அட்லி தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் மகேஷ் பாபுவை ஹைதரபாத்தின் பிரம்மோத்சவம் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்த அட்லீ அவருக்கு கதை சொல்லியுள்ளார். அதைக் கேட்ட மகேஷ் பாபு மிகவும் ஈர்க்கப்பட்டு படத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டியுள்ளாராம். ரொமான்ஸ் - ஆக்‌ஷன் கலந்த கதையாக அட்லீ சொல்லியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா ராணி முடித்த கையோடு அட்லீக்கு தெலுங்குப் படங்களை இயக்கும் வாய்ப்புகள் பல வந்தன. எனினும் விஜய் படத்தின் நிறைவுக்காகக் காத்திருந்தார்.

அதே சமயம் விஜய்க்கும் மீண்டும் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் தெலுங்கு மாஸ் ஹீரோ மகேஷ் பாபு, தமிழ் மாஸ் ஹீரோ விஜய் யார் படம் அடுத்து? எனக் கேள்விகள் உருவாகியுள்ளன. பார்க்கலாம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்