Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெறி பத்திரிகையாளர்சந்திப்புக்கு விஜய் வராதது ஏன்?

 தெறி படம் நாளை வெளியாகவிருக்கிறது, இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் அட்.லி. அப்போது வழக்கம்போலப் படத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசினார் அட்லி, அதைத் தொடர்ந்து கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

உங்கள் முதல்படம் ராஜாராணி, மௌனராகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது, இந்தப்படம் சத்ரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாமே என்கிற கேள்விக்கு, போலிஸ் கதை என்பதால் அப்படிப் பேச்சுவந்துவிட்டது என்று சொல்லிவிட்டு, ராஜாராணி மௌனராகம் போலவே இருந்ததா? என்று பத்திரிகையாளர்களிடம் கேட்க, எல்லோரும் அமைதியாக இருக்கவே மேற்கொண்டு தொடர்ந்த அட்லி, அப்படி இல்லை, ஒரு படத்தைப் பார்த்துவிட்டு இன்ஸ்பிரேஷனாகச் சில விசயங்களைச் செய்யும்போது அப்படி ஒரு எண்ணம் வந்துவிடுகிறது என்றார்.

சத்ரியன் படத்தைத் தழுவி தெறி எடுக்கப்படவில்லை என்பதை மட்டும் என்னால் சொல்லமுடியும் என்றும் சொன்னார்.

படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் பல திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, படத்தை முடித்து சென்சார் சான்றிதழ் வாங்குவதோடு என் வேலை முடிந்துவிடுகிறது அதற்கு மேல் தயாரிப்பாளர் வேலைதான் இதெல்லாம் எனவே இது சம்பந்தமாகத் தயாரிப்பாளரிடம்தான் கேட்கவேண்டும் என்றார்.

இந்தச்சந்திப்புக்கு சமந்தா வரவில்லையே என்றால், அதை சமந்தாவிடம்தான் கேட்கவேண்டும் என்றும் சொன்னார்.

சென்னையிலேயே படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யும் சந்திப்புக்கு வரவில்லை. படம் சம்பந்தமாக திரையரங்குஉரிமையாளர்களோடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் அதன் முடிவு தெரியாமல் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் தயங்கிக்கொண்டே விஜய் வரவில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close