Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் படத்திற்குக் காட்டிய வேகத்தை ஏன் அருள்நிதி படத்திற்குக் காட்டவில்லை... ஜே.எஸ்.கே சதீஷ் வருத்தம்!

தெறி படத்தை பாலிமர் சேனல் கேமரா மூலம் கோவை சாந்தி திரையரங்கில் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டதை ரசிகர்கள் மூலம் அறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் முப்பது நிமிட வீடியோவும் கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டது இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதே பாணியில் ஜே.எஸ்.கே.சதிஷ் தயாரிப்பில் வெளியான ”நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” படம் ஒரு திரையரங்க உதவியுடனேயே படம் பிடித்து திருட்டு டிவிடிக்கள் வெளியானது.

இதனை ஆதாரங்களுடன் அப்படத்தின்  தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே நிரூபித்தும்  தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று பாலிமர் சேனல் செய்ததாக சொல்லப்படும் நிகழ்வுக்கு உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ் கூறுகையில்,

 எனக்கும் இதே சம்பவம் நடந்தது. நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படம் சமயத்தில் திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் படத்தை எடுத்து டிவிடியாக வெளியிட்டனர். இதை நான் கையும் களவுமாகப் பிடித்துக்கொடுத்தேன். ஆனால் ஒரே நாளில் வெளியில் விட்டுவிட்டார்கள்.

அதே சமயம் பாலிமர் மாதிரி ஒரு சேனல் தெறி படத்தை அனைவரும் பார்க்க அதை படம்பிடிப்பார்களா என்பதே இங்கே எனது கேள்வி. என்னைப் பொருத்தமட்டில் இதையும் நான் ஒரு விளம்பரமாகவே பார்க்கிறேன். எனக்கும் தாணு சாருக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை, எனக்கு அவர் நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு பிரச்னை அன்று எனக்கு நடந்த வேளையில் காவல் துறை ஏன் அலட்சியம் காட்டினார்கள். அன்று காட்டிய அலட்சியம் காரணமாகத்தான் ”மாப்ள சிங்கம்” என்னும் படம் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பே திருட்டுத்தனமாக வெளியானது. 

செல்வாக்கான மக்களுக்கு ஒரு முறையிலும், சின்ன பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படமென்றால் ஒரு முறையிலும் ஏன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் பாலிமர் மாதிரியான ஒரு சேனல் எப்படி அவ்வளவு பெரிய படத்தைப் போய் திருட்டுத்தனமாக அதுவும் வீடியோ கேமராக்களுடன் பதிவு செய்வார்கள். யோசிக்க வேண்டாமா? நானும் அரசியலில் இருக்கிறேன் தான். ஆனால் அரசியலை விட சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பது சினிமா உலகம் தான்.

ஒரு விஷயம் எனக்கு சந்தோஷம் இப்போதாவது இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கிறார்களே . இதை எல்லாப் படங்களுக்கும் கடைபிடித்தால் திருட்டு டிவிடிக்களை ஒழிக்கலாம். தமிழ் நாட்டில் மட்டும் தான் திருட்டு டிவிடிக்கள் உள்ளன. கேரளா, ஆந்திரா எங்கும் இல்லை. இன்று ஒரு க்ளிப் எடுத்ததாக சொல்லப்பட்டதற்கே வேகம் காட்டியுள்ளனர். அதை பொதுநலத்துடன் எல்லாப் படங்களுக்கும் செய்தால் நல்லது என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.