Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னாது... பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் பண்ணாங்களா?

விஜய், அஜித், கமல், ரஜினி என்று நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதை ரசிகர்கள் விழாவெடுத்துக் கொண்டாடுவது வழக்கம். ரசிகர்கள் தன் அபிமான நடிகர்கள் மீது இருக்கும் அன்பினால் சொந்தக்காசை செலவழித்து செய்வது வழக்கம்.  

இந்நிலையில் தமிழ்நாடு பால்முகவர் நலச்சங்கத் தலைவர் சு.ஆர்.பொன்னுசாமி அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தைப் பர்த்ததும் அதிர்ந்துபோனோம். விஜய் நடித்து வெளியான தெறி முதல் நாள் ரிலீஸில், ரசிகர்கள் திரையரங்கிற்கு அருகில் இருக்கும் பால்முகவர்களின் கடைகளிலிருந்து பாலைத் திருடிக்கொண்டுபோய், கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்திருப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அன்றாட உயிர்காக்கும் அத்தியாவசிய பொருளான பாலை வீணடிப்பது மட்டுமல்லாமல், பால் முகவர்களின் வருமானமும் ரசிகர்களால் பாதிக்கப்படுகிறது பற்றி நம்மிடம் பேசினார் பொன்னுசாமி.

“தமிழகத்துல மட்டும் 15% சதவீதம் பேர் பால் வாங்கவே முடியாதளவுக்கு வறுமையில் இருக்காங்க. ஆனா ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போதும், கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள், பாலை திருடிட்டுப் போய்டுறாங்க. என்று ஆரம்பித்தவர் தெறி படம் ரிலீஸன்று என்ன நடந்தது என்பதையும் விளக்கினார்.

“நள்ளிரவு 1 மணிக்கு, கம்பெனிகாரங்க, பாலை கடைக்கு வெளியே இறக்கிவச்சிட்டுப் போய்டுவாங்க, நாங்க, 3 மணிக்குத்தான் பாலை கடைகளுக்கு விநியோகம் செய்யப் போவோம், ஆனா இந்த இடைப்பட்ட நேரத்துல ரசிகர்கள் பாலை திருடிட்டுப் போய்ட்டாங்க. தெறி படம் ரிலீஸான நேரத்துல, கோயம்புத்தார் பக்கத்துல பால் முகவர் கடைகளுக்கு முன்பு இறக்கிவைக்கப்பட்டிருந்த 200-300 லிட்டர் பால் வரைக்கும், பாலபிஷேகம் செய்யனு எடுத்துட்டுப் போய்ட்டாங்க.

திருட்டுப்போனா நஷ்டத்தை எப்படி ஈடு கட்டுவீர்கள்?

50 லிட்டர் பால் ஒவ்வொரு முகவருக்கும் திருட்டுப் போச்சினா, 2500 ரூபாய் வரைக்கும் இழப்பீடு ஏற்படும், ஒரு நாளைக்கு சம்பாத்தியமே 200 ரூபாய் தான் வரும், இந்தநிலையில 10 நாளைக்கு சம்பாதிச்சா தான் திருட்டுப்போன பாலுக்கான வருமானத்தை ஈட்டமுடியும். அதுமட்டுமல்லாம அந்த 10 நாளுக்கான வேலையாட்கள் கூலி, பெட்ரோல்னு ஒரு நாள் காணாம போன பாலுக்காக குறைஞ்சது 1 மாதமாவது கஷ்டப்பட்டாத்தான் ஈடு செய்யமுடியும்.

காவல்துறை ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லையா?

காவல்துறையினர் எங்கமேல தான் குற்றம் சொல்லுறாங்க. பால் லோடை கடைக்குள்ள இறக்கிவச்சிகோங்கன்னு, உங்க பொருள நீங்கதான் பாதுகாத்துக்கணும்னு சொல்லுறாங்க. பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை.

 தீர்வு தான் என்ன?

பாலபிஷேகம் செய்யப்படும் திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்வது தடுத்து நிறுத்தப்படும்ணு நடிகர்சங்கத்திலிருந்து அறிவிப்பு ஒன்றை வெளியிடணும், மேலும் படம் ரிலீஸாகும்போது கூடுதல் காவல் பாதுகாப்பு கொடுக்கணும்.  இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நடிகர்கள் இல்லை, நடிகர்கள் தங்களின் சுயதேவைக்காக ரசிகர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துனாலே போதும்.

நடிகர்கள் சொன்னா ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

கண்டிப்பா ஏத்துப்பாங்க, நடிகர்களின் உடை, பாவனை என்று பின்பற்றும் ரசிகர்களுக்கு, நடிகர்கள் தான் அறிவுரை சொல்லணும். ஆனா முன்னணி நடிகர்கள் பார்த்து ரசிக்கிறாங்க, ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை பெருமையா நினைக்கிறாங்க. அத கண்டிச்சாலே போதும்.

அதுக்கு பதிலா, தன்னோட படம் ரிலீஸ் ஆகற அன்னைக்கு தியேட்டர் வளாகத்துல, அதைச் சுத்தி இருக்கற இடங்கள்லன்னு ரத்ததானம், கண்தானம், உடலுறுப்புதானம்னு உபயோகமான வேலைகளை ரசிகர்கள் மூலமா செஞ்சாங்கன்னா இன்னும் பெரிய கவனம் கிடைக்கும். எந்த நடிகரோட ரசிகர்களையும் மக்கள் திட்ட மாட்டாங்க. அவங்கதான் சொல்லணும்.

பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தேவைப்படுகிற உயிர்காக்கும் அத்தியாவசிய உணவு பால் மட்டும் தான்.  இயற்கைப் பேரிடர் வந்தாலும் பாலை மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதை சேவையாத் தான் நினைக்கிறோம். இந்த தொழிலினால் பெரிதாக எந்த வருமானமும் கிடையாது. ஆனா மனநிறைவு இருக்கு.

ரசிகர்களின் இந்த மனநிலை மாறினாலே போதும் என்று முடித்தார்..

-பி.எஸ்.முத்து

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close