Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்கூட்டியே வெளியாகிறது வெற்றிவேல் - தெறி தான் காரணமா?

ஏப்ரல் 14ஆம் தேதி விஜய்யின் ‘தெறி’ படம் வெளியானது. வழக்கமாக பெரிய படங்கள் வெளியானால், அதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறெந்த முக்கியமான படங்களும் வெளியாகாது.

ஆனால், சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ படம் வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22 அன்று வெளியாகவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தெறி வெளியான அடுத்த வாரமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தை ஏப்ரல் 29ஆம் தேதியன்று வெளியிட ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்கள். இப்போது கோவில்பட்டி பகுதிகளில் தன்னுடைய அடுத்த படத்தின் படபிடிப்பில் இருக்கும் சசிகுமார், 29 ஆம் தேதி படம் ரிலீஸ் என்பதையொட்டி அதன் விளம்பரங்களில் சசிகுமார் கலந்துகொள்வதற்கேற்ப படப்பிடிப்பைத் தள்ளிவைக்கத் திட்டமிட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அதிலும் மாற்றங்கள் நடந்திருக்கிறதாம்.
 
குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் தள்ளிப்போவதுதான் வழக்கமாக நடப்பது. இங்கோ  திடீர் திருப்பமாக படத்தை ஒரு வாரம் முன்பாக, அதாவது இந்த வெள்ளிக்கிழமையே வெளியிடவிருப்பது திரையுலகினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 14ம் தேதி, தெறி திரையிடப்பட்டதால், 22ம் தேதி தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் 29 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 22 ஆம் தேதியன்றே இப்படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைத்துவிடும் என்பதாலேயே படத்தை ஒருவாரம் முன்னதாகவே வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close