Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமல் இல்லையென்றால் முள்ளும்மலரும் படம் வந்திருக்காது - இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சி

 ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வாகா படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார் கமல். பாடல்களைப் பெற்றுக்கொண்டவர் இயக்குநர் மகேந்திரன்.

நிகழ்ச்சியில் இயக்குநர் மக«ந்திரன் பேசும்போது, இங்கு பேசிய பலபேர் கமல் சாரால் இந்த இடத்துக்கு வந்தேன் என்று பேசினார்கள். அவர்கள் மட்டுமல்ல நான் இந்த இடத்தில் இன்றைக்கு நிற்பதற்கும் அந்த மகாகலைஞன்தான் காரணம். இந்த நிகழ்ச்சியில் இந்தப்படம் மற்றும் பாடல்கள் பற்றித்தான் பேசவேண்டும் என்றாலும் சில விசயங்கள் பதிவாகாமலேயே போய்விடக்கூடாது என்பதற்காக இந்த இடத்தில் பேசுகிறேன்.

நான் இயக்கிய முதல்படம் முள்ளும்மலரும். அந்தப்படத்தைப் படமாக்க முனைந்தபோது, சரியான ஒளிப்பதிவாளர் எனக்குக் கிடைக்கவில்லை, அதனால் படமே செய்யவேண்டாம் என்று கூட நினைத்தேன், அப்போது கமல்தான் எனக்கு பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திவைத்தார்.

படப்பிடிப்பு நடந்தது. படத்தின் டபுள்பாசிட்டிவ் வரை வந்துவிட்டது. ஆனாலும் படத்தில் இடம்பெறும் செந்தாழம்பூவில் பாடலுக்கு முந்தி எடுக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்படவில்லை. படத்தின் தயாரிப்புச் செலவு காரணமாக எங்கள் குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதால், இதற்குமேல் ஒரு பைசா கூடச் செலவழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

படத்தில் முக்கியமான அந்தக்காட்சியைப் படமாக்காமல் படத்தை வெனியிடுவதில் எனக்கு உடன்பாடில்லை, என்ன சொல்லியும் தயாரிப்பாளர் இணங்கவில்லை, அப்போதும் கமலிடம்தான் போய்ப் புலம்பினேன்.

அவர் உடனே தயாரிப்பாளரிடம் போய்ப்பேசினார். அவர் பேசியும் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை, மாறாக அந்தப்பாட்டே வேண்டாம் எடுத்தவரை ரிலீஸ் பண்ணுங்கள் என்றார். அப்போது கமல், வேறு யாராவது செலவு செய்து படப்பிடிப்பு நடத்தினால் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார். தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்போது இந்த மகாகலைஞன், தானே அந்தப் படப்பிடிப்புக்கான மொத்தச் செலவையும் செய்து படப்பிடிப்பு நடத்தினார். அதன்பின் தான் படம் வெளியானது. இப்போது முள்ளும்மலரும் படத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

கமல் உதவிசெய்யவில்லையென்றால், முள்ளும்மலரும் வெளியாகியிருக்காது அல்லது இப்போதுள்ள மாதிரி வெளியாகியிருக்காது, படம் ஒடியிருக்காது நான் உங்கள் முன் நின்றிருக்கமாட்டேன், எனவேதான் சொல்கிறேன் உங்களில் பலர் மட்டுமல்ல நான் இங்கே நிற்பதற்கும் அவர்தான் காரணம், அவருக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.


 அவருக்குப் பின்னால் பேசவந்த கமல், இதுபற்றிப் பேசும்போது, நான் உதவிவில்லையென்றாலும் மகேந்திரன் வந்திருப்பார், அவர் போன்ற ஒரு திறமையை கிணற்றுக்குள் போட்டு மூடிவைத்தாலும் பொத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவார் என்று சொன்னார்.

இதப்படிச்சீங்களா?

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்