Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 ஆவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த அனிருத்

 

சிவகார்த்திகேயன் இப்போது ரெமோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து இயக்குநர் மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ரெமோ படத்தைத் தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதன்பின் படத்தில் உள்ள ஒரு முக்கியவேடத்தில் நடிக்க மலையாள முன்னணிநடிகர் பகத்பாசிலை ஒப்பந்தம் செய்தார்கள்.

இப்போது படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்பக்கலைஞர்களை அறிவித்திருக்கிறார்கள். பருத்தி வீரன், இரண்டாம் உலகம், தனி ஒருவன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலைஇயக்கத்தை டி.முத்துராஜூம் படத்தொகுப்பை விவேக்ஹர்சனும் செய்யவிருக்கிறார்களாம். இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கிச்சட்டை ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்போது தயாராகும் ரெமோ படத்துக்கும் அவர்தான் இசை. ஐந்தாவது படமாக சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணையவிருக்கிறார்கள்.இயக்குநர் மோகன்ராஜாவும் அனிருத்தும் இணைவது இதுவே முதன்முறை.     

     
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close