Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுத்த கே.எஸ். ரவிக்குமார். ஏன்?

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தில் முக்கியவேடமொன்றில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். அவரை வைத்துப் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறதாம்.

இந்தப்படத்துக்காக அவருக்கு நாள்கணக்கில் சம்பளம் பேசியிருந்தார்களாம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிவடைகிறபோதும் அவருக்கான சம்பளம் வழங்கப்பட்டுவிடுமாம்.

அண்மையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவிட்டுச் சம்பளமும் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம்.

அன்றைக்கு இரவே படக்குழுவினருக்கு போன் செய்து, இன்றைக்கு, ஒருநாள் சம்பளத்தை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள், நான் இன்றைக்கு மூன்றுமணிநேரம்தான் வேலை செய்தேன். எனவே ஒருநாள் சம்பளத்தை வாங்கியது தவறு. எனவே அரைநாள் சம்பளம் கணக்கிட்டு எனக்குக் கொடுத்தாலே போதும், மீதிப்பணத்தை வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

படக்குழுவினரால் இதை நம்பமுடியவில்லையாம். அதேசமயம் அவர்தான் சொல்லுகிறாரென்றால் உடனே போய்ப் பணத்தைக் கேட்கவேண்டாம் என்று விட்டுவிட்டார்களாம். ஆனால் அவர் விடவில்லையாம். அடுத்த நாளும் போன் செய்து வந்து பணத்தை வாங்கிக்கொண்டேயாகவேண்டும், இப்படி சம்பளம் வாங்கியது எனக்கு உறுத்தலாக இருக்கிறது என்று சொல்லிக் கட்டாயப்படுத்திப் பணத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார்.

இன்றைய திரையுலகில் இப்படி ஒரு மனிதரா என்று அந்தப்படக்குழுவினர் மட்டுமின்றி விசயம் தெரிந்த பலரும் வியந்துபேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

படத்தின் தயாரிப்பாளர் ஆர்,டி.ராஜா, தன்னுடைய டிவிட்டரில், உங்களுடைய தொழில்பக்தி, நன்னெறிமுறை மற்றும் மனிதநேயத்தை வணங்குகிறேன். நீங்கள் எல்லோருக்கும் இன்ஸ்பிரேசன் என்று சொல்லியிருக்கிறார்.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்