Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் அஜித் பாடலை நிறுத்தச் சொன்னேனா?... விஷால் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விஷால் நட்சத்திர கிரிக்கெட் முடிந்த இரவு பார்ட்டியில் அஜித்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது எனவும், அதை விஷால் நிறுத்தச் சொன்னார் எனவும் செய்திகள் பரவி வந்தன. மேலும்  நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மக்கள் தான் காரணம் என விஷால் சொல்லியதாகவும் செய்திகள் சுற்றலில் இருக்க, இதற்கு ட்விட்டரில் விஷால் பதிலளித்துள்ளார்.

அந்த ட்வீட்டில் “ ஒரு செய்தி நான் அஜித் பாட்டை நிறுத்தச் சொன்னேன் எனச் சொல்கிறது, இன்னொரு செய்தி கிண்டலான ஒரு அறிக்கை நான் வெளியிட்டதாக சொல்கிறது. இது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. எப்படி உங்களால் நான் சொல்லாத விஷயங்களை பதிவு செய்ய முடிகிறது?” எனக் கேட்டுள்ளார் விஷால்..

இந்நிலையில் இந்தச் செய்திகளுக்கு விஷால்  சார்பில் அவருடைய ரசிகர்கள் காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ,

                   'வணக்கம் கடந்த 17.04. 2016 அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் விழா நடைபெற்றது. தற்போது அந்த விழா சார்பாக  திரு.விஷால் அவர்கள் சில கருத்துகளை தெரிவித்ததாக கீழக்கண்ட வலைதளங்களில் சில தவறான செய்திகளை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக விஷால் நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் தமிழக காவல் துறைக்கும் மற்றும் பொது மக்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் நன்றி தெவித்துள்ளார்.

எனவே இவர்கள் கூறுவது போல் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்கும் விதத்தில் எந்த வித தவறான செய்தியையும் தெரிவிக்கவில்லை. இது போன்று மேலும் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்'

இவ்வாறு விஷாலின் ரசிகர்கள் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்