Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துக்கும் கவுண்டமணிக்கும் 8 ஒற்றுமைகள்!

சமீபத்தில் சந்தானம், 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ”கவுண்டமணி அண்ணன் அந்த காலத்து அஜித் குமார்.. பிரஸ்மீட், சினிமா நிகழ்ச்சி, இப்படி எங்கயுமே பார்க்க முடியாது.. சினிமாவுல மட்டும் தான் பார்க்க முடியும்”. எனப் பேசி கவுண்டமணியின் காமெடிகளையும், கவுண்டர்கள் குறித்தும் பேசினார்.

காமெடி கிங் கவுண்டமணிக்கும் , ஓப்பனிங் கிங்  அஜித்துக்கும் என்ன  ஒற்றுமைகள் என நம் ஆறாம் அறிவை சற்றே தூண்டிவிட கிடைத்தன எட்டு ஒற்றுமைகள்.  இதோ....

1. சந்தானம் கூற்றுப்படியே இருவருமே சினிமா நிகழ்ச்சிகள், பிரஸ் மீட்கள் என அதிகம் வெளியே வரமாட்டார்கள். சினிமாவில் மட்டுமே இருவரின் தரிசனமும் கிடைக்கும்...

2. இருவருமே ட்ரெண்ட் செட்டர்ஸ்: அஜித் படம் ஏன் அஜித்தின் தலைப்பு ரிலீஸ் என்றால் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ட்ரெண்டை உருவாக்கி கொண்டாடி விடுவார்கள் கவுண்டமணியோ இப்போதும் எப்போதும் காமெடி நடிகர்களுக்கும், ஏன் இணையவாசிகள் உருவாக்கும் மீம்ஸ், ட்ரெண்ட் என அனைத்திலும் கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக்குகள் தான் வைரல். இப்போது தேர்தல் அதகளத்தில் கூட கவுண்டரின் கவுண்ட்டர்கள் தான் மாஸ் காட்டுகின்றன.

3. யாராக இருந்தாலும், ஏன் ரஜினியே கூட சேர்ந்து நடித்தாலும் கலாய்த்துத் தள்ளி, கவுண்ட்டர் கொடுத்து ஜாலி கேலி காட்டுவது கவுண்டர் ஸ்டைல் என்றால் தனியாய் நின்று ரசிகர்களின் அன்பில் திளைப்பது அஜித்தின் ஸ்டைல்.

4. என்னதான் அரசியல் படமாகவே இருந்தாலும் கூட பல டாப் நடிகர்களும் சில வசனங்களைத் தவிர்த்து நாசூக்காக பேசுவார்கள். ஆனால் கவுண்டமணிக்கு பாகுபாடே கிடையாது ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எல்லாமே ஒன்றுதான். ஒரு காட்டு காட்டுவார். அஜித், படங்களில் அடக்கி வாசித்தாலும் சொந்த வாழ்க்கையில் அப்படி எதையும் யோசிக்காமல் மனதில் சரி எனத் தோன்றுவதை வெளிப்படையாக பேசிவிடுவார் அதனாலே பல பிரச்னைகளை சந்தித்தார்.

5. எந்த நடிகரிடமும் மைக்கை நீட்டி கேள்வி கேட்டால் அஜித் செம பணிவு, சாப்பிடாம விடவே மாட்டாரு, அவ்ளோ பெரிய மனுஷன் நம்மள வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவாரு. எங்களுக்கு ரோல் மாடல் அவருதான் என கண்டிப்பாக பாராட்டிருவாங்க. அதே  போல், காமெடி நடிகர்கள் யார் மேடையில் ஏறினாலும் கவுண்டமணி தான் எங்கள் ரோல் மாடல் என யோசிக்காமல் பாராட்டுவார்கள்.

6. அட இந்த சினிமாக்காரங்க தான் விளம்பரம்னு அலையறாங்க என வசனம் பேசியது மட்டுமின்றி கவுண்டமணி இதுவரை தனது பிறந்தநாளை அவ்வளவு பிரம்மாண்டமாக கொண்டாடியதில்லை. அஜித்தைப் பொறுத்தவரை, ஆடியோ லாஞ்ச், ப்ரஸ்மீட் என்று தனது படங்களுக்குக்கூட பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடத்தியதில்லை.  

7. இருவருமே மே மாதம் பிறந்தவர்கள்!

8. இருவருமே தாங்கள் தேர்வு செய்த பாதையில் தனக்கென ஒரு தனி பாணிகளை அமைத்து ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். கவுண்டமணி ரசிகர்கள் அவரை மகான் என்பதும், அஜித்தின் ரசிகர்கள் அவரை தல என்பதும் ரசிகர்கள் சொந்த அன்பின்பால் செய்வதே. இருவரும் இணைந்து நேசம், ரெட்டை ஜடை வயசு, மற்றும் அவள் வருவாளா ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளனர். மூன்றிலுமே கவுண்டமணி அஜித்தின் காதலுக்கு உதவி செய்வார். இது கூட ஒற்றுமைதான்.

- ஷாலினி நியூட்டன் -

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close