Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய், பூவே உனக்காக, பரங்கிமலை..! என்ன சம்மந்தம் சொல்லுங்கள்..?

அஸார் , பிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் சாரல்.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்திப் பேசினர்.

நடிகை ஸ்ரீப்ரியங்கா தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தார், அதற்கு இயக்குநர் விக்ரமன் பேச ஆரம்பிக்கும் போதே பதில் கொடுத்தார். ப்ரியங்கா நீங்கள் வருத்தப் படாதீர்கள்... ஹேமாமாலினி , ஸ்ரீதேவி என தமிழ் பேசிய நடிகைகள் இந்தியில் பெரிய அளவில் வந்துள்ளனர் என்றார். தொடர்ந்து பேசியவர். ஹீரோ அஸார் குறித்து பேசுகையில், நான் அஸாரை பார்த்தவுடன் உடனே எனக்குப் பிடித்துபோக அவரை நான் என் படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டேன்...

அஸார் டயலாக் ஒரு தடவ தான் கேட்பார் உடனே அப்படியே சொல்லிடுவார். நல்ல டான்ஸரும் கூட. எனப் பாராட்டியவர். ”பூவே உனக்காக” படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அந்தப் படம் பண்ணும் வேளையில் சீனியர் நடிகர் ஒருவர் நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் கதைக் கேட்டவர் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு கனமான ஒரு கேரக்டரை விஜய் தாங்குவாரா. நீ குருவி தலையில் பனங்காயை வைத்திருக்கிறாய் என்றார். அப்போது நான் இல்லை சார் நான் சரியாதான் தேர்வு செய்திருக்கிறேன். அந்தப் பையன் நல்லா வருவான் என்றேன்.

முதல் நாள்,  நான் நாகர் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தப் போது ஒரு நீளமான வசனம் ஒரு முறை தான் கேட்டிருப்பார் விஜய்,  அப்படியே வசனத்தை ஒரே டேக்கில் எடுத்தார். அன்று முழுக்க விஜய்யை வைத்து காமெடி சீன்களும், காதல் வசனங்களும் என எதை எடுத்தாலும் அவ்வளவு அற்புதமாக நடித்தார். என்னிடம் முன்பு பேசிய சீனியர் நடிகருக்கு இரவு போன் செய்தேன். சார் என்னிடம் குருவி தலையில் பனங்காயை வைக்கிறாய் என்றீர்களே இந்தப் பையன் தலையில் பரங்கிமலையையே வைக்கலாம் . வேண்டுமானால் பாருங்கள் கண்டிப்பாக இவர் மிகப்பெரிய நடிகராக வருவார் எனக் கூறினேன். பல தயாரிப்பாளார்களுக்கு நான் விஜய்யை பரிந்துரை செய்து கிட்டத்தட்ட செய்தித் தொடர்பாளர் போல் செயல்பட்டேன். அப்போது விஜய் மீது வைத்திருந்த அதே நம்பிக்கை இப்போது அஸார் மீதும் இருக்கிறது என படத்தின் நாயகனான அஸாரை புகழ்ந்தார் விக்ரமன். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்