Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆத்ரேயா!ஆத்ரேயாடா!! 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 24. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் என இணையத்தில் செம ஹிட். இப்படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு கேம் 24ஆத்ரேயாரன் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த கேமுக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. க்ரியேடிவ் மங்கி கேம்ஸ் இந்த கேமை உருவாக்கியுள்ளனர்.

ஆத்ரேயாரன் எனப்படும் இந்த கேம் முழுக்க முழுக்க கிரான்ட்தெஃப்ட் ஆட்டோ டிசைனில் தப்பிக்கும் சூர்யா என்னும் ஒன் லைனுடன் உருவாகியுள்ளது. தீபக் அரவிந்த் கான்செப்டை டிசைன் செய்ய, கவிதா கேம் புரடியூஸராகவும், புரகாமராக வித்யா தீர்த்தனும் இணைந்து இந்த கேமை உருவாக்கியுள்ளார்கள்.

இதே பாணியில் துப்பாக்கி, ஜில்லா, அஞ்சான் என திரைப்படங்களை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்டு கேம்கள் வெளியானது குறிப்பிடத்தது. இந்நிலையில் இந்த 24 பட கேம் ஐஓஎஸ் ஆப்பிள் வாடிக்கையாளர்களையும் குஷியாக்கவிருக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close