Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”சொல்லி தொலையேம்மா”.. 10 வருடங்களுப் பிறகு மீண்டும் தனுஷ், யுவன் மேஜிக்!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் 'யாக்கை' திரைப்படம் மூலம் இணைந்துள்ளனர்.

கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் முத்து குமரன் தயாரித்து வருகிறார். இந்த படக்குழுவினர் யூடூபில் வெளியிட்ட 'நீ எந்தன்' என்னும் பாடல் மக்களிடையே வரவேற்புகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது தனுஷும், யுவனும் ஜோடி சேர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

"காதலியின் அன்பு வார்த்தைகளுக்காக ஏங்கி கிடக்கும் காதலன், ஒரு கட்டத்தில் அவள் மீது கோபம் கொண்டு பாடுவதே இந்த 'சொல்லி தொலையேம்மா'' பாடலின் கரு. இந்த பாடலுக்கு ஏற்ற குரலை தேர்வு செய்யும் யோசனையில் இருந்த போது, தனுஷின் குரல் மட்டும் தான் இந்த பாடலுக்கு ஏற்ற குரல் எனவே அவர் தான் இந்த படாலை பாட வேண்டும் என்று இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூற தற்போது தனுஷ் இப்படலைப் பாடவிருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்