Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளையராஜா சாய்ஸை டிக் அடித்த கமல்! #வெளியானது கமலின் அடுத்த படத்தலைப்பு!

நடிகர் சங்க கட்டடத்தில் கமல் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி இன்று காலை பிரபலங்கள் மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

முதலில், நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் முதல் விழா என்பதால் அதற்கான காசோலையை கமல் வழங்க, பொருளாளர் கார்த்தி பெற்றுக் கொண்டார்.

கமலுடன், இளையராஜா, ஸ்ருதி, விஷால், நாசர், மன்சூர் அலிகான், பாண்டியராஜன், பிரபு. கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் படத்தலைப்பை வெளியிட்டார்.

தமிழில் இளையராஜா வைத்த ’சபாஷ் நாயுடு’ பெயரைத்தான் கமல் டிக் அடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் படம் ஏற்கனவே பாதி அமெரிக்காவில் படமாக்கப்பட்டு விட்டது. தமிழ், தெலுங்கில் இவருடன் துணை கதாபாத்திரத்தில் தமிழ் தெலுங்கில் பிரம்மானந்தம் நடித்திருக்கிறார்.

ஜோடியாக ரம்யாகிருஷ்ணனும், மகளாக ஸ்ருதி ஹாசனும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் கதை, திரைக்கதையில், இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் படத்தை டி.கே.ராஜிவ்குமார் இயக்குகிறார்.

டி.கே. ராஜிவ்குமார் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். கேரள திரையுலகில் பேர் பெற்ற ஓர் இயக்குநர். 1989ல் கமல், ஊர்மிளா நடிப்பில் இவர் இயக்கிய ‘சாணக்கியன்’ என்ற மலையாளப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

கமல் வெளியிட்ட மூன்று மொழி போஸ்டர்:-

.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ