Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கபாலி'யின் கோடி ஹிட்ஸ் ரெகார்ட் ப்ரேக்!

ளபதி என்று ஒரு படம் ரிலீசாகிறது. மணிரத்னம் என்கிற ஒருவர் இயக்குநர். ரஜினிகாந்த் என்கிறவர் நாயகர்.

அந்த தளபதி படத்தின் பாடல் கேசட்டில் வெளிவந்தபோது, அதிகாலை ஐந்து மணிக்கு க்யூவில் நின்று வாங்கியவர்களில்நானுமொவருவன். தளபதி வெளிவந்தபோது ரஜினிக்கு வயது 41. எனக்கு 17. இணையம் என்கிற வஸ்து உலகத்தை ஆளுமென்றொ, இந்தியாவில் காலூன்றுமென்றோ... ஏன்.. இந்த தளபதி நாயகன் ரஜினி 25 வருடங்கள் கழித்து ஒரு படம் நடிப்பாரென்றோ, அதன் டீசரென்ற ஒரு 67 நொடி சமாச்சாரம் இத்தனை பேசப்படுமென்றோ..

விடுங்கள். போரடிக்கிறேன்.

கேட்ஜெட் என்கிற அம்சத்திற்கு விளக்கம் சொல்ல எந்த ’சுஜாதா’வும் இன்று நம்மிடையே இல்லை. கையிலிருக்கும் குட்டியூண்டு ரிமோட்டும் கேட்ஜெட்தான். ‘அபூகாகசம்’ என்று சுவற்றில் எதையோ திருப்ப கதவு திறக்குமே.. அந்த பிரமாண்ட கதவும் - அது எலக்ட்ரானிக் கலந்த விஞ்ஞானமென்பதால் -கேட்ஜெட்தான். நிச்சயம் உங்கள் மொபைல் ‘கேட்ஜெட்’தான். டிவிகூட கேட்ஜெட்தான். கபாலி டீசரை டவுன்லோட் செய்திருப்பீர்களே... அந்த டேப்லெட் கேட்ஜெட்தான்.. அதை சேமித்திருப்பீர்களே... அந்த பென் டிரைவ் கேட்ஜெட்தான். இல்லையென்றால்.. அந்த டீசர் உட்கார்ர்ந்திருக்கும் மெமரி கார்ட் இருப்பதும் கேட்ஜெட்தான்.

எதற்கு இத்தனை பீடிகை என்றுதானே எண்ணுகிறீர்கள்?

ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் இத்தனை லட்சம் ஹிட்ஸைத் தொட்டிருப்பது நிச்சயம் இந்தப் புவியில் வரலாறுதான். பச்சன், கான், குமார்களின் ரெகார்டையெல்லாம் அடித்து நகர்த்தியிருக்கிறது இது. 15 நிமிடத்தில் ஐம்பதாயிரத்தைத் தாண்டிய இந்த ஹிட்ஸ், 22 மணி நேரத்தில் 50 லட்சத்தை எட்டியிருக்கிறது. அதுவும் எப்படி, யு ட்யூபில் பார்ப்பது மட்டும்தான். நேற்று ஒரு ரகசியக் குழுவில் பகரப்பட்டிருந்த செய்தியைப் பகிர்ந்தார் நண்பரொருவர். (2016ல் ரகசியமாவது மண்ணாங்கட்டியாவது! )

“கபாலி டீசரை நான் டவுன்லோடி இங்கே தருகிறேன். யாரும் யூ ட்யூபில் பார்க்காதீர்கள். பார்த்தால் நம் நாயகனின் பட ஹிட்டை, கபாலி முறியடிக்கக் கூடும். ஆகவே தயவு செய்து யூ ட்யூபில் பார்க்காதீர்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதை நம் தலைவனின் ரசிகர்கள் எல்லாருக்கும் பகிருங்கள்” என்றது அந்தச் செய்தி.

படத்தின் பாடல் கேசட்டை டேப் ரிகார்டர் என்கிற கேட்ஜெட்டில் போட்டுக் கேட்கவே க்யூவில் நின்ற காலம் அல்ல இது. ஒவ்வொருவர் கையிலும், பையிலும் கேட்ஜெட்டுகள். வீட்டில் குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை ஆளுக்கொரு கேட்ஜெட்டில் டவுன்லோடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறைதான் நேரடி இணையம். அதன்பிறகு தரவிறக்கம். இதுதான் இணைய இளைஞர்களின் தாரக மந்திரம். இதற்கு நடுவில் ‘நானே தரவிறக்கித் தருகிறேன். ஹிட்ஸ் ஏற்றாதீர்கள்’ என்று இவர்கள் அங்கலாய்ப்பு வேறு. ரஜினியின் காலத்திலிருந்து ரசிகராக இருப்பவர்களில் பலருக்கு இன்று நாற்பதுக்கு மேல் வயது. இந்த இணைய விளையாட்டெல்லாம் தெரியாது. அவர்களில் பாதி பேருக்கு மேல் இதை நேரடி இணையத்தில் பார்க்காமல், வீட்டு இளசுகளின் மொபைலிலோ, வாட்ஸப்பிலோதான் பார்த்திருப்பார்கள். அதையெல்லாம் மீறித்தான் இந்த ஹிட்ஸ் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது கபாலி.

நாமெல்லாம் ஃபேஸ்புக்கில் நூறு லைக்ஸ் வந்தால் கொண்டாடிக் கொள்கிறோம் அல்லவா, இந்த நிமிடம் வரை 99,83,382 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும்.. மதியத்திற்குள் ஒரு கோடியைத் தொட இருக்கும் கபாலி டீசரின் கமெண்ட்களில் ஒருவர், ‘நானும் இந்த கபாலியில் சிறைக் காட்சியில் நடித்திருக்கிறேன்’ என்றிருக்கிறார். அவரது கமெண்டுக்கு இருநூறைத்தாண்டி லைக்ஸ். ‘எந்த சீன்னு சொல்லு நண்பா.. பார்க்கறேன்’ என்றெல்லாம் அவரையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யப்படவேண்டிய அம்சம் என்னவென்றால், இந்தப் படத்தை இயக்கிய பா. இரஞ்சித்தோ, இசையமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணனோ ரஜினி, தன் முதல் படத்தில் நடிக்கும்போது பிறந்திருக்கவே இல்லை.

ஆக, இந்த டீசரின் USP... ஒன்றே ஒன்றுதான்

ரஜினி!

-சத்ரியன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close