Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்க்காக களமிறங்கிய விஷால்! - பஸ் பஞ்சாயத்து

பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் பேருந்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதைப் பார்த்த பயணி ஒருவர், விஷாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

உடனே விஷால், அதை ஆதாரத்துடன் உறுதி செய்யவேண்டும் என்பதற்காக, அந்த பயணியிடம் வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியதாகத் தெரிகிறது, உடனே அந்தப் பயணியும் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் கொடுத்துள்ளார் விஷால். அந்தப் புகாரின் பேரில், ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் அன்று காலை மதுரவாயல் அருகே அந்த தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.

ஏற்கெனவே, பைரஸியை அடியோடு ஒழிப்பேன் என்று விஷால் சபதமிட்டிருந்தார், மேலும் மருது பட ரிலீஸின் போது நானே களத்தில் இறங்கி திருட்டு விசிடியை கையும் களவுமாகப் பிடிப்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.