Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்களிக்க வந்த விஷால், ஆர்யாவால் பரபரப்பு!

சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர்கள் விஷால், ஆர்யாவை புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் பூத் அதிகாரிகளுக்கும், போட்டோகிராபர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாநகர் கிழக்கில் வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், நடிகர் ஆர்யா ஆகியோர் காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது, அவர்களைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றனர். இதனை பூத் அதிகாரிகள் தடுத்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர் நடிகர் விஷாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 59வது பூத்தில் வாக்களிக்க மக்கள் அதிகமாக இருந்ததால் வரிசையில் நிற்காமல் நேரிடையாகவே உள்ளே சென்று வாக்களித்தார். இதனால் வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்கள் முகம் சுளித்தனர். ஆர்யாவுக்கு 51வது பூத் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆர்யா வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இரண்டு பேரும் வாக்களித்துவிட்டு வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இரண்டு பேரையும் பார்க்க கூட்டம் அதிகரித்ததால் காவல்துறையின் அவர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

செய்தி, படம்: எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close