Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசிய வதந்திக்கு சூர்யா பதில்!

மலேசியாவில் ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா’ நடக்க இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ள சூர்யா லட்சக் கணக்கில் பணம் கேட்டதாகவும் மலேசியா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட இணையம் முழுக்க சூர்யாவை விமர்சித்து வருகிறார்கள், இதற்கு சூர்யா தற்போது மறுப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில் ,

அனைவருக்கும் வணக்கம்,

மலேசியா தமிழ்ப் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா’ என்ற மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் நான் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.

இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல்கூட எனக்குத் தெரியாது கலந்துகொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூக வளர்ச்சி மாற்றம் , விழிப்பு உணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

மலேசியாவில் நடைபெறுவதாகச் சொல்லப்படும்’மகா இந்து இளைஞர் ஒற்றுமை’ விழாவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள், இனி இதுபோன்ற தவறான நோக்கத்தோடு இடம்பெறும் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளித்து, தொடர்ந்து எனக்குத் துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

என அக்கடிதத்தில் சூர்யா கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close