Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்போர்ட் பண்ணனும் - நடிகர் அர்விந்த் சாமி பேச்சு.

63 வது பிலிம்ஃபேர் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் ஜூன் 18 தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறந்த தென்னிந்தியப் படங்கள் வெவ்வேறு பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கின்றன. இந்த விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் பிரபலநடிகர் அரவிந்த்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியினை, நடிகர் அரவிந்த்சாமி, பிலிம்ஃபேர் நாளிதழின் ஆசிரியர் ஜிதேஷ் பிள்ளை, மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு வினய்சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, “ நான் 1999 ஆம் ஆண்டு முதல் சினிமாவிலிருந்து விலகி இருந்தேன். அது ஒரு நீண்ட காலகட்டம். அந்த நேரங்களில் நான் படங்கள் பார்ப்பது கூட இல்லாமல் முழுவதும் விலகி இருந்தேன். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு இதே பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்காக என்னையும் ஒரு நடுவராக தேர்வு செய்த போது தான் மிகக் குறைந்த நேரத்தில் சிறந்த பல படங்கள் பார்த்தேன். அது அப்போது ஒரு புதிய உணர்வைத் தந்தது. அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நானும் ஒரு அங்கம் வகிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. ” என்றார். தமிழ்ப்படங்களில் இவ்வாறு நடிக்க வேண்டும் ஹிந்தி படங்களில் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்து தேர்வு செய்வீர்களா, என்ற கேள்விக்கு, “அந்த மாதிரி எந்த வரைமுறையும் கிடையாது. நல்ல கதையை கேட்கும் போது அதனை சப்போர்ட் பண்ணணும். அது மாதிரி ஒரு கதை தான் Dear Dad.

அந்தக் கதையை கேட்கும் போது நிச்சயமாக பண்ணணும் என்று தோன்றியது. அதனால நடித்தேன். எல்லாமே சினிமா தான். நல்ல கதையாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன்.” என்றார். பாலிவுட்டில் சமீபத்தில் அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த “DEAR DAD ” படம் சற்று வித்தியாசமான படமாக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேரப் பெற்று வருகின்றது எனபது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.