Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்க எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலு.. நான் ஏழாங்க்ளாஸ் பாஸு - பத்தாவதும் தமிழ் சினிமாவும்

பத்தாம் வகுப்பு... நம் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை என்பது போல பூஸ்ட்-அப் பண்ணி வைத்திருக்கிறார்கள். அது தமிழ் சினிமாவிலும் பலப்பல திருப்புமுனைகளை உண்டாக்கியிருக்கிறது. அப்படி சில பத்தாப்பு திருப்புமுனைகள் இங்கே... 

”ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்!” மயிலு இப்படி ஓடி வந்து சொல்லிக் கொடுத்த பிறகுதான், பத்தாப்பு வெற்றியை அவ்வளவு உற்சாகமாகக் கொண்டா வேண்டும் என்று கண்டுகொண்டார்கள் நம்மவர்கள்.

“நீ அன் எஜுகேட்டட் அவரு எஜுகேட்டட்” என பிரதாப் போத்தன் பற்களைக் கடித்தபடி தனுஷை கிண்டலடிக்க.. பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆன தனுஷ், ‘வராத படிப்ப வா வா’ன்னா எப்படி வரும்? என எகிறுவது... நம்மில் பலர் வீடுகளில் அனுதினம் நிகழ்வது!

”அண்ணே , நீங்க பத்தாப்பு பெயிலுண்ணே, நான் ஏழாப்பு பாஸுண்ணே” - அட... ”நத்திங் பட் கவுண்டமணி’ என தமிழ்சினிமாவின் காமெடிக் கிங்காக இருக்கும் கவுண்டருக்கே கலாய் கொடுத்த, இந்த உலகமகா தத்துவத்தால் நாம் எத்தனையெத்தனை இடுக்கண் வருங்கால் நகுக சந்தர்ப்பங்களை சத்தம் போட்டு சிரித்துக் கடந்திருப்போம்!

’தான் உண்டு தான் வேலை உண்டு’ என இருப்பவனை ஒரு பெண்ணின் பத்தாம் வகுப்பு பருவம் என்னவெல்லாம் செய்யும் என்பதை ’ஞஞஞஞஞ’ போட்டுக் காண்பித்த படமாச்சே இந்த உலக கிளாஸிக்!

சின்ன வயதில் சண்டையிட்டு பிரிந்து சென்ற காதலியை மீண்டும் சந்திக்கும்போது, ‘வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடியதும்’ என தம்தன பாடச் சொல்லிக் கொடுத்தது ஒரு பொன்வசந்த வேளை.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close