Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா?

ஐ.பி.எல்  முடிஞ்சுருச்சு அடுத்து யூரோ கால்பந்து, ஒலிம்பிக்னு வரிசையா ஸ்போர்ட்ஸ் சீசனா வர்ற இந்த சமயத்தில் ‘ஸ்போர்ட்ஸ் சம்பந்தமா நறுக்குன்னு நான்கு கேள்விகளுக்குப் பதில் சொல்ல ரெடியா?’ என்று நாம் கேட்டதும், ''என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க...விளையாட்டிலும் நாங்க கில்லிதான்.நாங்களும் பிளேயர்ஸ்தான்'' என்று  க்யூட் பதிலுடன் தயாரானார்கள் நம் ஹீரோயின்ஸ் நால்வர்.

சஞ்ஜிதா ஷெட்டி:

ஐ.பி.எல் லில் பிடிச்ச டீம்?  ராயல் சேலஞ்ச் - பெங்களூர்

பிடிச்ச பிளேயர் :  நமக்கு எப்பவும் விராட் கோலிதான்..  அவர பார்க்கும் போதே ஒரு ப்ரண்ட்லி பிஹேவியர் தெரியும்.

ஓர்  இண்டர்நேஷனல் விளையாட்டின் பெயர் சொல்லுங்க?

டென்னிஸ்!. சானியா மிர்சா மாதிரி விளையாடணும்னு  டிரீம் இருக்கு.. பட் விளையாடத் தெரியாது.. ஹி.. ஹி..

நீங்கள் விளையாடிய விளையாட்டு எது? நான் ஷட்டில் காக் பிளேயர்.

மறக்க முடியாத விளையாட்டு அனுபவம்?

சொன்னா சிரிக்கக் கூடாது. ஸ்கூலில் படிக்கும்போது ஒரு ஆர்வத்தோட P.T. பீரியட்ல விளையாடப் போனேன்.ஆனா விழுந்து எழுந்து இரத்தம் வடிய வடிய வீட்டுக்கு வந்து மறுநாள் லீவு போட்டு அம்மாகிட்டயும் மேக்ஸ் மிஸ்கிட்டயும் திட்டு வாங்கனதுதான் மிச்சம்!

- ஊர தெரிஞ்சுக்கிட்டேன்..உலகம் புரிஞ்சுகிட்டேன்.

ஆனந்தி:

ஐ.பி.எல் லில் பிடிச்ச டீம்:  எனக்கு ஹைதராபாத்தான் நேட்டிவ்.  நான் எங்க ஊரு சன்ரைசஸ் டீமுக்குதான் சப்போர்ட் பண்ணுவேன்.

பிடிச்ச பிளேயர் : அப்பவும் எப்பவும் சச்சின்தான்.இப்போ பிட்ச்ல இல்லாட்டியும்கூட எப்பவும் அவர் மாஸ்தான்.

ஓர் இண்டர்நேஷனல் விளையாட்டின் பெயர் சொல்லுங்க?
செஸ்! ஹே.. நானும் சூப்பரான செஸ் பிளேயர் தெரியுமா?!

நீங்கள் விளையாடிய விளையாட்டு எது? செஸ் பிளேயர்னாலும் கேரம் ரொம்ப பிடிக்கும்.

மறக்க முடியாத விளையாட்டு அனுபவம்?

ஒரு டைம் விளையாடுறேன்னு வீட்ட விட்டு வெளிய போயி கீழ விழுந்து அடிபட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் என் அம்மா எப்பவும் என்னை வெளியே விளையாட விடமாட்டாங்க. இல்லன்னா பெரிய பிளேயரா பார்த்துருப்பீங்க இந்த ஆனந்திய!

-குயிலப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்!

அட்டக்கத்தி நந்திதா:

ஐ.பி.எல் லில் பிடிச்ச டீம்:  ஐய்யோ இப்படி மாட்டிவிட்டீங்களே...ஐ.பி.எல் பார்க்கவே இல்ல பாஸ்.

பிடிச்ச பிளேயர் : கூல் கேப்படன் தோனிதான்.அவரோட ஆட்டிட்யூடை அடிச்சுக்கவே முடியாது.

ஓர் இண்டர்நேஷனல் விளையாட்டின் பெயர் சொல்லுங்க?

ஹாக்கி! ஆமா... ஹாக்கி  இண்டர்நேஷ்னல் கேம்தானே... தப்பா எதுவும் சொல்லலையே...

நீங்கள் விளையாடிய விளையாட்டு எது? நம்பணும்! கோக்கோ, த்ரோ பால் பிளேயர் நான்...

மறக்க முடியாத விளையாட்டு அனுபவம்

எனக்கு ரன்னிங் பிடிக்கும். பட் எப்பவும் லாஸ்ட்லதான் வருவேன். ஒரு முறை நானே எதிர் பார்க்காத விதமா பர்ஸ்ட் பிரைஸ் வாங்கினதுதான் நம்ப முடியாத அனுபவம்.

- நான் பொல்லதவள்!

நிக்கி கல்ராணி:

ஐ.பி.எல் லில் பிடிச்ச டீம்:  ஜெயிச்ச டீம் தான்..ஆமா எந்த டீம் ஜெயிச்சது?

பிடிச்ச பிளேயர் : சூப்பர் மேன் சச்சின்.

  ஓர் இண்டர்நேஷனல் விளையாட்டின் பெயர் சொல்லுங்க? 

கிரிக்கெட் தவிர வேற எதுவும் தெரியாதே..இந்த டார்லிங்க்கு...

நீங்கள் விளையாடிய விளையாட்டு எது? கல்லி கிரிக்கெட்..அப்படினா என்னனு தெரியுமா? நெட்டில் தேடி பாருங்க ...

மறக்க முடியாத விளையாட்டு அனுபவம்:

கல்லி கிரிக்கெட் விளையாடும் போது பசங்களுக்கு நிகரா எங்க டீமுக்கு போராடுவேன். ஒரு சீக்ரெட் சொல்லட்டா? விளையாடுறேன்னு நிறைய பேரத் தள்ளி விட்டிருக்கேன். யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!

- அதான் இந்தப் பட டிரெய்லர்ல அந்த அடி அடிக்கிறீங்களோ!..

சு.சூர்யா கோமதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close