Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் விஷால் தஞ்சாவூரில் விவசாயம் செய்ய போவதாக அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள  ஆதிரங்கம் கிராமத்தில் இன்று நடைபெற்ற நெல் திருவிழாவில்  நடிகர் விஷால், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

நாற்றாங்காலில் விதைநெல் தூவி,  பின்னர் சிறப்புரையாற்றினார் விஷால்.  “ எந்த  ஒரு சூழலிலும்  விவசாயிகள் தற்கொலை  முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்னைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது. வாழ்ந்து  போராடி வெற்றி பெற  வேண்டும்.   

எல்லா துறைகளிலும்  பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு தற்கொலையை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதிக்கு மேல்  உயிருடன்  இருக்க  மாட்டார்கள். கஷ்டங்களில்  தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக்  காத்திருக்கிறேன். விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது. ஒரு நாட்டில் விவசாயி நன்றாக இருந்தால் அந்த நாடு  நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். 

நான் தஞ்சாவூரில் நிலம்  வாங்கி விவசாயம் செய்யப்  போகிறேன். பத்திரிகைகளில் மட்டும்  விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. நேரடியாக நிலத்தில் இறங்கிப் பார்த்தால் தான் அனுபவப்பூர்வமாக உணர முடியும் என்றார் விஷால்.

தொடர்ந்து நடிகை  ரோகிணி பேசும்போது “பத்தாண்டுகளுக்கு  முன் நம்மாழ்வார் அய்யாவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விழாவில் இந்தமுறை நான் கலந்து கொள்வதை பெரும்  பாக்கியமாக கருதுகிறேன். விவசாயிகளுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என மனதார நினைக்கிறார் விஷால். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட  விவசாயி பாலனுக்கு முதல் ஆளாக தாமாக ஓடி வந்து உதவினார் . அதற்கு பெரிய மனசு வேணும்” என நெகிழ்ச்சியோடு பேசினார் ரோகிணி. 

கு.  ராமகிருஷணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close