Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை! விஷால் தெளிவு!

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்த விஷால். ‘நீதிமன்றத்தை மீறி நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை’ என்றிருந்தார். இது, ‘ஜல்லிக்கட்டுக்கு தடை’ என்ற நீதிமன்றத் தீர்ப்பை விஷால் ஆதரிப்பதாக இருக்கிறது என்று தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தான் பேசியதை தெளிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கருத்து ஒன்றை தற்பொழுது தெரிவித்துள்ளார்.

முன்னர், தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷின் அறிக்கையில், “ விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்பது போலத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறியது, தமிழ்ச் சமூகத்தை இழிவு படுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது விஷால் தனது ட்விட்டரில் மீண்டும் சொல்கிறேன். ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவைப் பகிர்ந்து, ‘இதில் நான் எங்கே ஆதரிப்பதாய்ச் சொல்லியிருக்கிறேன்’ என்றும் வினா எழுப்பியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close