Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேந்தர் மூவீஸ் மதன் இருப்பிடம் குறித்து இயக்குநர் விக்ரமன் சொன்ன பதில் என்ன?

வேந்தர் மூவீஸ் மதன் மாயமானது குறித்து இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மதன் எங்கே என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “ மதன் விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் குறித்து பதிலளிக்க முடியாது, ஆனால் பாரிவேந்தர் திரைத்துறையினருக்கு நிறைய உதவிகள் செய்துவருகிறார்.  மதன் மாயமானது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று இயக்குநர் விக்ரமன் பதிலளித்தார்.

‘வேந்தர் மூவீஸ்’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மதன், ‘கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தலைமறைவாகி உள்ளார். அவர் கடிதத்தில் உள்ள விவரங்கள், எஸ்.ஆர்.எம் குழுமம், ஐ.ஜே.கே. கட்சி நிறுவனர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து மற்றும் அவரின் குடும்பத்தினரைச் சுற்றிக் கடும் சர்ச்சைகளைக் கிளப்பின.

தற்பொழுது, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம், பாரிவேந்தருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  மேலும் அதற்கான விளக்கத்தை இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறுகையில், “ இயக்குநர் சங்கத்திற்கு பல உதவிகளை பாரிவேந்தர் செய்திருக்கிறார்.  திரைத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வி, மருத்துவம் என்று அனைத்தையுமே இலவசமாக பாரிவேந்தர் செய்துவருகிறார். அவரின் பெயரில் ஒரு களங்கம் ஏற்பட்டால், அவர் பக்கம் இருந்து அவரைப் பற்றிச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் . அவருக்கு எதிராக வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வருகின்றன. ஆனால் பாரிவேந்தர் ரொம்ப நல்லவர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் எங்களுக்கு எதிர்வினை வந்தாலும் கவலைப்படமாட்டோம்” என்றார். 

மதன் நிலை என்ன ஆனது என்று கேட்டதற்கு, போலீஸ் விசாரித்துவருகிறது. அவர்கள் தான் யார் பக்கம் தவறென்பதை கூறவேண்டும். எனவே மதனைப் பற்றி எதுவும் பேசவிரும்பவில்லை” என்று கூறினார்.

திடீரென பாரிவேந்தருக்கு ஆதரவாக பேச என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ நான் எதற்காகவும் விலைபோக மாட்டேன். என்னை யாரும் விலைகொடுத்து வாங்கமுடியாது. இதுவரை எங்களுக்கு பல உதவிகளை வேந்தர் செய்திருக்கிறார். எனவே அவருக்கு ஒரு பிரச்னையென்றால் பேசவேண்டியது எங்கள் கடமை. அதற்காகவே பேசுகிறோமே தவிற வேறென்றும் இல்லை” என்று கூறினார்.

இதுவரையிலும் மதன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது பற்றியான பல மர்மங்கள் உள்ள நிலையில், இயக்குநர் சங்கம் பாரிவேந்தர் பக்கம் ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.