Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ கட்டப்பாவ காணோம்” சிபிராஜ் சக்ஸஸ் பார்முலா

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்திற்கான தலைப்பை தற்பொழுது உறுதிசெய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

போக்கிரி ராஜா படத்தினைத் தொடர்ந்து சிபிராஜின் அடுத்த படத்திற்கு “கட்டப்பாவ காணோம்”, என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.  பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்தவர் சிபிராஜின் தந்தையான சத்யராஜ். பாகுபலி படத்தின் இறுதிக் காட்சியில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போல படம் முடிந்திருக்கும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கான பதில் பெரிதும் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் சிபிராஜ் கூட ட்விட்டரில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா என்று நகைச்சுவையாக ட்விட்டியதும், அந்த ட்விட் ட்ரெண்டானதும் குறிப்பிடத்தக்கது.  அந்த கட்டப்பா கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்ட சிபிராஜ் தன்னுடைய படத்திற்கு “கட்டப்பாவ காணோம்” என்று பெயரிட்டுள்ளாராம்.

தவிர, இவரின் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் முக்கிய பாத்திரத்தில் நடித்தது எப்படியோ, அது போல இந்தப் படத்தில் ஒரு மீன் படம் முழுவதும் முக்கிய பாத்திரத்தில் வருமாம். இதுவரை மீனை முக்கிய பாத்திரத்தில் கொண்ட படங்கள் தமிழில் வெளியாகவில்லை. எனவே வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் மணி செய்யோன். இவர், இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாந்தினி, காளிவெங்கட், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகிறார்கள். தவிர, இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close