Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டு டிவிடியை ஒழிக்க 2.O பட நிறுவனத்தின் புதுமுயற்சி!

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில், ஜூன் 17-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”. டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியிருக்கிறார்.

சமீபகாலமாக திருட்டு டிவிடி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவருகிறது. பேருந்துகளில் திருட்டு டிவிடியில் படம் திரையிடுகிறார்கள் என்று அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க நடிகர் சங்க செயலாளர் விஷால் பல முயற்சிகளை எடுத்துவருகிறார். மேலும் பல நடிகர்களும் திருட்டு டிவிடிக்கு எதிராக பேசிவருகின்றனர். ஆனாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது.

இந்நிலையில், “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா, திருட்டு டிவிடியை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இத்திரைப்படத்திற்கான வர்த்தக ரீதியான டிரேட்மார்க் ஒப்புதல் எண்ணை பதிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து (Copy Rights) பெற்றுள்ளது. இதன்படி சட்டவிரோதமாக படத்தை இணையத்தில் தரவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்தாலோ, திருட்டு டிவிடிக்களை விற்பனை செய்தாலோ சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். திரையுலகில் இது முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலம் திருட்டு டிவிடிகளை தயாரித்து விற்பனை செய்யும் கும்பலை எளிதில் தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்பதால் அவற்றைக் கணிசமாகக் கட்டுப்படுத்த இம்முயற்சி கை கொடுக்கும்  என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

லைக்கா நிறுவனம் விஜய்யின் கத்தி படத்தை தயாரித்தது. தற்பொழுது ரஜினியின் எந்திரன் 2.O படத்தை தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close