Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னைக்கு ரிலீஸாகும் கபாலி டீஸரில் என்ன ஸ்பெஷல்?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாக தயாராகிவரும் படம் கபாலி. ரஜினி வேற லெவல் கெட்டப்பில் வெளியாகவிருக்கும் கபாலி படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், கபாலியின் இரண்டாவது டீஸர் இன்றிரவு 8 மணிக்கு ரிலீஸாகவிருக்கிறது.

கபாலி முதல் டீஸர் மே1ம் தேதி ரிலீஸானது. ரிலீஸான சில நிமிடங்களிலேயே பல லட்சங்களைத் தாண்டி சாதனை படைத்தது. இதுவரை அதிகபேர் பார்வையிட்ட டீஸர் - டிரெய்லர் பட்டியலில் ரஜினியின் கபாலிக்கு தான் முதலிடம். இன்று வரை கபாலி டீஸரை இரண்டு கோடியே 21 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதோ கபாலியின் இரண்டாவது டீஸர் இன்றிரவு 8 மணிக்கு ரிலீஸாகிறது. இந்த டீஸரில் என்ன ஸ்பெஷலாக இருக்கும் என்று விசாரித்ததில்,

35 நொடிகள் நீளமுள்ள டீஸர் வெளியாகிறது

  படத்தின் மெயின் வில்லனான  தைவான் நடிகர் சாவோ, முதல் டீசரில் கபாலியை வரச்சொன்ன  கிஷோர் மற்றும் ரஜினிக்கு மகளாக நடித்திருக்கும் தன்ஷிகா ஆகியோரின் காட்சிகள் டீஸரில் இடம்பெற்றிருக்கும்.

பழைய கெட்டப்பில் மிரட்டும் ஒரு சண்டைக்காட்சி.

“ நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, 25 வருசத்துக்கு முன்னாடி...” பஞ்ச் வசனத்துடன் நெருப்புடா பாடல் வரிகளுடன் களம் இறங்குகிறது இன்றைய கபாலி டீஸர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்