Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெளனகுரு இந்தி ரீமேக்; ரிலீஸ் குழப்பத்தை தீர்த்த சோனாக்‌ஷி சின்ஹா!

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை சில மாற்றங்களுடன் இந்தியில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அகிரா என்கிற பெயரில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் சோனாக்ஷிசின்கா கதைநாயகியாக நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கொங்கனாசென் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தையான நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

கடந்தஆண்டு இறுதியிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் என எதைப்பற்றியும் எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது.

படத்தை முழுமையாகப் போட்டுப் பார்த்துவிட்டு, படம் சரியாக வரவில்லை என்பதால் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டதாகவும் செய்திகள் முன்னர் வெளிவந்தன. அது சம்பந்தமாகப் படக்குழுவினர் எந்தத்தகவலும் சொல்லவில்லை.

இந்நிலையில், கடந்தஆண்டு (2015) மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (2016) ரிலீஸாகியிருக்கிறது. மேலும் இப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று ட்விட்டரில் உறுதிபடுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.

மேலும் சோனாஷி ட்விட்டரில், “ஏ.ஆர்.முருகதாஸ் என்னை முழுமையாக மாற்றியுள்ள 'அகிரா' படத்தை காண நீங்களும், நானும் இனிமேலும் காத்திருக்க வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல மாதத்திற்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இவ்வளவு நாட்கள் படம் தள்ளிப்போனது எதனால் என்பது புரியாமல் இருந்த நிலையில் படம் ரிலீஸ் தேதியை அறிவித்து குழப்பத்திற்கு முற்றுப் புள்ளிவைத்திருக்கிறார் சோனாஷி சின்ஹா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close