Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

50 யானைகளுடன் படப்பிடிப்பிற்கு தயாராகும் ஆர்யா!

மஞ்சப்பை படத்தின் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் “கடம்பன்”, ஆர்யாவிற்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்துவரும் இப்படத்திற்கான க்ளைமேக்ஸ் காட்சிகள் தாய்லாந்து பகுதியில் நடக்கவிருக்கிறது.

தாய்லாந்து நாட்டின் “சியாங் மை” என்ற பகுதியில் வரும் ஜுலை 1ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனால் முன்கூட்டியே ஆர்யாவும், இயக்குநர் ராகவனும் செல்லவிருக்கிறார்கள். ஏனென்றால், க்ளைமேக்ஸ் காட்சியில் ஆர்யா, யானைகளுடன் நடிக்கவிருப்பதால், அதற்கான பயிற்சிக்காக முன்கூட்டியே செல்கிறார்களாம். 

தாய்லாந்தின் யானைப் பண்ணையிலுள்ள 300க்கும் மேற்பட்ட யானைகளிலுருந்து 50 யானைகளை படப்பிடிப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஐம்பது யானைகளுடன் ஆர்யா க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கவிருக்கிறார். அதனால் யானையை எப்படி கட்டுப்படுத்துவது, அதனுடன் பழகுவது சார்ந்த பயிற்சிக்காகவே ஆர்யா செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. க்ளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் ஐந்து கோடி பட்ஜெட் ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அங்குள்ள யானைகளுக்கான வாடகையே பெரும் தொகையை பிடித்துவிடுமாம்.

இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் முடிந்ததும், ஆர்யா, கேத்ரீன் தெரஸாவிற்கான மீதமுள்ள காட்சிகளை திருப்பதியில் உள்ள தலகோனா பகுதியில் படப்பிடிப்பு நடத்த, படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியும் அடுத்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடியும்.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்துவரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அமீர் இயக்கவிருக்கும்  கிராமத்துக் கதையில் ஆர்யா நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close