Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலைப்போலவே அர்ஜுனும்! இது புது காம்போ!

அர்ஜூன் பல ஹிட் படங்களில் நடித்தவர் மட்டுமில்லாமல், பல ஹிட் படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார். மீண்டும் படம் ஒன்றை இயக்கவும் தயாராகிவிட்டார்.

அர்ஜுனின் “ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷனல்” நிறுவனம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி அர்ஜுனே இயக்கவிருக்கும் படம் தான் “காதலின் பொன் வீதியில்”. இப்படத்தில் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கிறார். பட்டத்துயானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. அவருக்கு இரண்டாவது படமென்பது குறிப்பிடத்தக்கது. 

அர்ஜூன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தன் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 22ம் தேதி சென்னையில் துவங்கி நடந்துவருகிறது. தவிர, ஹைதராபாத், டெல்லி, மும்பை, தர்மசாலா உள்ளிட்ட பல பகுதியிலும் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது கமல் எழுதி, இயக்கிவரும் சபாஷ் நாயுடு படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது போல, அர்ஜுனும் தன்னுடைய மகளையே நாயகியாக வைத்து படம் இயக்குவது  குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close