Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கபாலி. ரசிகர்களின் உச்சபட்ட எதிர்பார்ப்புடன் வெளியாக தயாராகிவரும் கபாலி படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன.

கபாலி படம் தமிழ் பதிப்பிற்கான சென்சாருக்கு வரும் ஜூலை 1ம் தேதி படம் அனுப்பப்படவிருக்கிறது. தொடர்ந்து ஜூலை 15ம் தேதி  படம் வெளியாகவிருக்கிறது. கூடுதலாக, இப்படத்தில் இளம் வயது ரஜினி தான் அதிக காட்சிகள் படத்தில் வருவார் என்றும் கூறப்படுகிறது.

தவிர, ஜூலை 14ம் தேதியே பாரிஸின் மிகப்பெரிய திரையரங்கான “லீ கிராண்ட் ரெக்ஸ்”ஸில் திரையிடப்படுகிறது. இத்திரையரங்கில் மொத்தம் 2200 இருக்கைகள் உள்ளது. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுவரும் இத்திரையரங்கில், முதன் முறையாக இந்திய திரைப்படம், அதுவும் தமிழ் படமான கபாலி திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close