Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கபாலி' ரிடர்ன் - 3, ரிலீஸ் - 22.... முதல் பிரின்ட் ரெடி...

'கபாலி' ஃபீவர் பூமிப்பந்தைத் தாண்டி ஆகாயத்தை உரசும் அலுமினிய புறா விமானத்திலும் பரவிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு  கலைப்புலி தாணு,  'எனக்கு மட்டும் ரஜினிசார் கால்ஷீட் கொடுத்தால் அந்த படத்தின் பூஜையின் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுவேன், நோட்டீஸ் பிரயோகிப்பேன்' என்று பிரகடனப்படுத்தினார். அன்று சொன்னதை இன்று மறக்காமல் விமானத்திலேயே 'கபாலி' பட விளம்பரத்தைச் செய்து பிரமிக்க வைத்து விட்டார். 

ஏர் ஆசியா விமான நிறுவனத்துடன் ஆறுமாத ஒப்பந்தம் செய்து இருக்கிறார். 'கபாலி ' ரிலீஸாகி ஆறுமாத காலம்வரை விளம்பர விமானம் வானத்தில் ஓடும் மேகநதியில் நீச்சலடிக்கும்.  அதற்கான  மட்டும்  விரல்விட்டு எண்ண முடியாத பலகோடிகள் செலவு. 'கபாலி' விமான விளம்பரத்தைப் பார்த்து பாலிவுட் சினிமா விக்கித்து நிற்கிறது.

ஹைதராபாத்தில்  'கபாலி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியை ஆந்திராவில் உள்ள ஒரு டிவி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. அந்த நிகழ்ச்சி முழுவதையும் அமெரிக்காவில் இருந்தபடி ரஜினி டிவியில் பார்த்து ரசித்தார்.

சென்னைக்கு ஜூலை 3-ம்தேதி திரும்புகிறார், ரஜினி என்று உறுதியாகச் சொல்கிறார்கள். தேதி தள்ளிப்போனால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.  'கபாலி' படத்தின் முதல்பிரின்ட் ரெடியாகி விட்டது. முன்பு 'கபாலி'யின் டபுள்  பாசிட்டிவ் பார்த்துவிட்டுச் சென்ற ரஜினி சென்னை வந்தவுடன்  'கபாலி'யின் முதல் பிரின்ட் பார்க்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் போஸ்ட் புரொடக்‌ஷன் உட்பட அனைத்தும்  முடிந்தது.   மலேசியாவில் பேசும் 'மலாய்' மொழியின் டப்பிங் உடனே முடிந்துவிடும் எதிர்பார்த்தனர் ஆனால் முடியவில்லை. மலாய் மொழி பேசுபவர்கள் மலேசியா, இந்தோனேசியா என்று முக்கியமான ஆறு பகுதிகளில்  அதிகம் உள்ளனர்.  மலாய் டப்பிங் பிரச்னையால் மட்டுமே ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

'கபாலி'யை ஜூலை 1-ம்தேதி சென்சார் செய்து,  15-ம்தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று மும்முரமாக இறங்கினார், தயாரிப்பாளர் தாணு. எனினும் மலாய் டப்பிங் காலதாமதம் ஆனது. இப்போது ஜூலை 7-ம்தேதி சென்சார், 22-ம்தேதி ரிலீஸ் உறுதி. கேரள விநியோக உரிமையை மோகன்லாலும், கர்நாடக உரிமையை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷூம் வாங்கி உள்ளனர்.

திரையில் 2-மணிநேரம், 32-நிமிஷம் ஓடக்கூடிய 'கபாலி'  மூன்று பீரியட் கொண்ட படம். 30-வயது ரஜினி, 45-வயது ரஜினி, 60-வயது ரஜினி என்று மூன்றுவித கெட்டப்புகளில்  தோன்றி துவம்சம் செய்கிறார்.  மூன்று பீரியட்டிலும் ரஜினியுடன் மோதும் அதகள வில்லனாக வின்ஸ்டன் சாவோ நடிக்கிறார்.

- எம். குணா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.