Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“நெருப்புடா” விக்ரம்பிரபுவின் புதிய படம்!

“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்” இந்த வரிகளே தற்பொழுது இளைஞர்களின் ஃபேவரைட் ரிங்டோன், அந்த அளவிற்குப்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நெருப்புடா பாடல்.

ரஜினி நடிப்பில் கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி, பாடவும் செய்திருப்பார்.

தற்போது நெருப்புடா என்பது, விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இப்படத்திற்கான பெயர் அறிமுக விழா சென்னையில், சிவாஜியின் அன்னை இல்லத்தில் இன்று(புதன்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, ஏ.வி.எம்.சரவணன் மற்றும் விக்ரம் பிரபுவின் தந்தை நடிகர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு , தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். தீயணைப்பு வீரர் என்பதால், தீ விபத்திலிருந்து மக்களைக்  காப்பாற்றுவதே பிரதான கதையாக இருப்பதால் “நெருப்புடா” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று, கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் தலைப்பிற்கான அனுமதியை கேட்டிருக்கிறார்கள். அவரும் உடனே ஓகே செல்லிவிட்டாராம். அதன்பிறகு படத்திற்கு டைட்டிலை உறுதிசெய்துவிட்டனர் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close