Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபாலி: சென்சாரில் யு சான்றிதழுடன் ஜூலையில் ரிலீஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கபாலி. சென்சாருக்காக படம் இன்று தணிக்கைத் துறை அதிகாரிக்களுக்கு திரையிடப்பட்டது.

ரஜினியின் கபாலி, சென்சார் அதிகாரிகளின் கத்தரியிலிருந்து தப்பித்து, க்ளீன் யு சன்றிதழ் பெற்றிருக்கிறது. கபாலி படத்தின் மொத்த நேரம் 152 நிமிடம். அதாவது 2:32 மணி நேரம். இதை தாணு ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

படத்திற்கு சென்சார் நடைபெற்றப்பின்னரே படத்தின் தேதியை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இந்நிலையில் இன்று சென்சார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளதால், படத்திற்கான ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

தகவலின்படி, ஜூலை 22ம் தேதியே படம் ரிலீஸாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், கிஷோர் மற்றும் வில்லனாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close