Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா.. ரஜினி.. யாத்ரா மூவருமே மகிழ்ச்சி!

தலைமைச் செயலகம் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவர்கள் நேற்று சென்றிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் தான் ரஜினிகாந்தின் பேரனும், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனுமான யாத்ரா படிக்கிறார். நேற்று சென்ற மாணவர்கள் குழுவினருடன் யாத்ராவும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, ரஜினிகாந்த் பேரன் உள்ளிட்ட மாணவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியாக உரையாடினார்.

இது குறித்து ரஜினிகாந்தின் பேரன் யாத்ரா, “அம்மா எங்களை கூப்பிட்டு சாக்லேட் கொடுத்தாங்க, இது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ரஜினி

இந்நிலையில் கபாலி படம் ரிலீஸாகும் போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் தான் இருப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. தற்போது அமெரிக்காவில் சச்சிதானந்த சுவாமியின் லோட்டஸ் ஆசிரமத்தில் ரஜினி தங்கியிருக்கிறார்.

சச்சிதானந்த சுவாமிகள்  கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுவயது தொட்டே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர், தனது 35வது வயதில் அமெரிக்கா சென்று ஆன்மிகப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். ரஜினி தன் குருவாகச் சொல்பவர்களில் சச்சிதானந்த சுவாமிகளும் ஒருவர்.  'பாபா' படம் ரிலீஸ் ஆனபோது, அதைப்  பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தார் சச்சிதானந்த சுவாமி. அப்போது எதிர்பாராத விதமாகக் காலமானார். அவரின்  உடலை விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை மிகுந்த சிரத்தையோடு செய்தார் ரஜினி. அவரது லோட்டஸ் ஆசிரமத்தில்தான் ரஜினி தங்கியிருந்து தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அப்பாவை பார்க்க அமெரிக்கா போனார். அப்போது அவர் கபாலி படத்தின் ஃபைனல் பிரதியை எடுத்துச் சென்றாராம். டீசரைப் பார்த்து மகிழ்ந்தது போலவே, படத்தின் ரிசல்ட்டிலும் சந்தோஷமான ரஜினி, அங்கிருந்து போனில் சம்பந்தப்பட்ட டெக்னிஷீயன்களை அழைத்துப் பாராட்டினாராம்.

அமெரிக்காவில் கபாலி ரிலீஸ் ஆக உள்ள  தியேட்டர் ஒன்றில், ரஜினி படம் பார்க்க சிறப்பு ஏற்பாடு நடந்து வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்