Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் பிடிவாதம் ரஜினிக்குப் பிடித்தது! - இயக்குநர் ரஞ்சித்

நேற்றைக்கு வெளியானது ஒரு நிமிட ‘மேக்கிங் ஆஃப் கபாலி’ வீடியோ. அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது ரஜினி படம் என்பதை விட, ரஞ்சித் இயக்கிய படமாகத்தான் பேசப்படும் என்பது. தோள்களைக் குலுக்குவதாகட்டும், ஸ்டைலாக தலையை ஆட்டுவதாகட்டும் ரஞ்சித் சொல்வதை அச்சுப் பிசகாமல் செய்கிற ‘டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்’டாகத்தான் ரஜினி இருக்கிறார்.

மேக்கிங் ஆஃப் கபாலி வீடியோவை ஒரு நிமிடம் பாருங்கள்:-

     

இதுபற்றி விசாரித்தபோது கோலிவுட் வட்டாரங்கள் சொல்லும் தகவல்கள், ரஞ்சித் கெத்துதான் என்று எண்ணவைக்கிறது.

 தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் துளிகூட பதற்றமடையவில்லை, தலை,கால் தெரியாமல் ஆடவில்லை. மிகமிகத்  தெளிவாக, நிதானமாக 'கபாலி' படத்தை பூஜைமுதல்  பூசணிவரை இயக்கி முடித்து இருக்கிறார் ரஞ்சித் என்கிறார்கள். ரஞ்சித்திடம் பேசியபோது அவரும் அதைத்தான் சொன்னார்.              

''முதலில் இரண்டு கதைகளின் ஒன்லைன்களை செளந்தர்யாவிடம் சொன்னேன். கேங்ஸ்டர் கதையை க்ளிக் செய்தார்.  செளந்தர்யா அதைச்  சொல்ல, ரஜினிசாருக்கும் பிடித்து போனது.  அப்புறமாய் கொஞ்சம் ஸ்கிரிப்ட் தயார் செய்யச் சொன்னார்கள்.  அதன்பின்  கொஞ்சநாள் கழித்து போன் வந்தது 'நீங்க சொன்ன கதை ரொம்ப ‘ரா’வாக இருக்கு. கதையிலே அங்கங்கே காமெடி சீன்கள் அப்பா வைக்கச் சொன்னார்' என்று செளந்தர்யா சொன்னார். 'அது எனக்கு வராது. தவிரவும் நீங்க சொல்ற  காமெடி சீன்கள் வச்சா கதையின் தன்மை கெட்டுப் போயிடும் அதனால் நான் கண்டிப்பா காமெடி சேர்க்க மாட்டேன். நகைச்சுவைக்கான போர்ஷனை கதையே தரும். அதுதான் கரெக்டா இருக்கும்'ன்னு நான் சொல்லிட்டேன்.


             அதன்பின் பெரிய இடைவெளி . சரி அடுத்த வேலையை பார்ப்போம்னு  சூர்யா படத்துக்கான கதையில கவனம் செலுத்தினேன்.  திடீர்னு 'உடனே கிளம்பி வரச்சொல்லி' போயஸ் கார்டன்ல இருந்து போன் வந்துச்சு. ரஜினிசாரை பார்த்து 'கபாலி' படத்தோடு முழு ஸ்கிரிப்ட்டையும் சொன்னேன். 'சூப்பர்... சூப்பர்...'னு பாராட்டியவர். 'சரி.. உடனே ஷூட்டிங் கிளம்பிடலாம்' என்று சொன்னார். 'ஸாரி சார் மூணு மாசம் கழிச்சுதான் ஷூட்டிங், அதுக்குள்ளே இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியிருக்கு' என்று மறுத்துச் சொன்னேன். அப்படியே என்னை வெறித்து பார்த்தவர் 'ஓ.கே ஓ.கே உங்க இஷ்டம்' என்று என் கருத்துக்கு மதிப்பு கொடுத்தார்.

வழக்கமா சூப்பர் ஸ்டாரா இருக்குற  ரஜினிசாரை இயக்குகிற வாய்ப்பு ஒரு டைரக்டருக்கு கிடைச்சா அவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். காமெடியை சேர்க்கச் சொன்னால் சேர்ப்பார்கள். ரஜினிசார் பேச்சை மறுக்காமல் உடனே ஷூட்டிங் கிளம்பி இருப்பார்கள். நான் அப்படிச் செய்யவில்லை 'கபாலி' கதையை வடிவமைப்பதில், திட்டமிடுதலில் நான் பிடிவாதமாக இருந்தேன். என்னிடம் இருந்த அந்த பிடிவாதம்தான் ரஜினிசாருக்கு பிடித்தது''

ரஞ்சித் எந்த இடத்திலும் ரஜினிக்காக இந்தக் கதையை மாற்றவில்லை. வெங்கட்பிரபுவுடன் பணிபுரிகையில், ஷூட்டிங்கிற்காக மலேசியா சென்றிருந்தபோது, அங்கே கண்டு, கேட்டு உருவாக்கிய ஒரு கதையைத்தான் ரஜினிக்குச் சொல்லியிருக்கிறார்.  ரஜினியும் ஒரு பக்கா டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். படப்பிடிப்பில் ஒரு கட்டத்தில் ‘என்னை ரொம்ப வேலை வாங்கறீங்க டைரக்டர் சார்’ என்றிருக்கிறார் ரஜினி. டப்பிங் பேசுவதற்கு ‘அஞ்சு நாள் டைம் வேணும் பாஸ்’ என்று கேட்டிருக்கிறார்.  டப்பிங்கில் வழக்கமாக டைரக்டர் இருக்கக் கூடாது என்பது ரஜினியின் பாணி. இந்தப் பட டப்பிங்கில் ரஞ்சித் ‘நானும் இருப்பேன்’ என்று இருந்திருக்கிறார். கரெக்‌ஷன்கள் சொல்லியிருக்கிறார். டெக்னிஷியன்கள், கதாபாத்திரங்கள் தேர்வு என்று எல்லாவற்றையும் ரஞ்சித்திடமே விட்டிருக்கிறார் ரஜினி. 

வெரிகுட் ரஞ்சித்! வெரிகுட் ரஜினி!

- எம். குணா   
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close