Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகை அமலாபால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு!


நடிகை அமலாபால் மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த அமலாபால், கடந்த 2010ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும், 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குநனராக அறிமுகமாகி, 'மதராச பட்டினம்,' 'தலைவா,' 'தாண்டவம்,' 'சைவம்,' 'இது என்ன மாயம்' உள்பட பல படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் இயக்கிய செய்த 'தலைவா,' 'தெய்வ திருமகள்' ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12ஆம் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை இயக்குநர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய், அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, அமலாபால், இயக்குநர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தனர். இயக்குநர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்த நிலையில், அமலாபால், இயக்குநர் விஜய் இருவரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தீபிகா முன்னிலையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த விவகாரம், தமிழ்-மலையாளப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!