Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவுக்கு 'நோ'... விஜய்க்கு 'எஸ்'... ரஞ்சித்தின் ரகசிய முடிவு...!

கார்த்திக் நடித்த  'மெட்ராஸ்' பட வெற்றிக்குப் பிறகு ரஞ்சித்துக்கு சின்ன அட்வான்ஸ் கொடுத்து சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது ரஞ்சித்தின் குருநாதர் வெங்கட் பிரபு இயக்கிய 'மாஸ்' படத்தில் படு பிஸியாக இருந்தார், சூர்யா.  அடுத்து விக்ரம்குமார் இயக்கிய '24' படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். இந்தச் சூழ்நிலையில் ரஜினிபட வாய்ப்பு வந்தது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் அனுமதி கேட்டார் ரஞ்சித். 'ரஜினி படத்துக்கு பிறகு எங்கள் நிறுவனத்தில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க வேண்டும்' என்று நிபந்தனையின் பெயரில் 'கபாலி' படத்தை இயக்க அனுமதி தரப்பட்டது. 

அடுத்து ரஞ்சித்துக்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதியில் 'சிங்கம்-3' படத்தில்  நடித்தார், சூர்யா. சினிமாவில் 41 ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்துவரும் ரஜினியை அசால்ட்டாக படப்பிடிப்பில் ரஞ்சித் வேலை வாங்கிய விதம் பார்த்து பல சினிமா புள்ளிகள் புருவம் உயர்த்தி அண்ணாந்து பார்த்தனர். ஒரு வழியாக 'கபாலி'யும் ரிலீஸானது. அடுத்து சூர்யா படத்தை இயக்க 'கபாலி' ரஞ்சித்  'கொம்பன்'  முத்தையா, 'தெறி' அட்லி  என்று மூன்று இயக்குனர்கள் காத்து இருந்தனர்.

 'கபாலி' படத்தின் கதையை ரஜினியிடம் ரஞ்சித் சொன்னபிறகு சிலநாள் கழித்து செளந்தர்யா போன் செய்தார். 'கபாலி'  கதையில் காமெடி காட்சிகளை சேர்த்து கதையை மாற்றச் சொன்னார் டென்ஷனான ரஞ்சித் ஒரு காட்சியைக்கூட மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். பின்னர் ரஜினியும் ரஞ்சித் சொன்னபடியே இயக்கட்டும் நாம் எதிலும் தலையிட வேண்டாம் என்று செளந்தர்யாவிடம் ரஜினி நாசூக்காய் சொல்லி விட்டார். அதன்பின் ஒரு காட்சிகூட ரஜினி தலையீடு இல்லாமல் படமாக்கப்பட்டது, ரிலீஸூம் செய்யப்பட்டது

'கபாலி' பட இயக்கத்துக்கு  முன்பு சூர்யாவுக்கு ரஞ்சித் சொன்ன கதை  அவருக்கு பிடித்து இருந்தது. அடுத்து இப்போது அதே கதையை கொஞ்சம் மெருகேற்றிச் சொல்ல  சூர்யா கதையில் சில  மாற்றங்கள் செய்யச் சொன்னார்.  'ரஜினியே ஒரு காட்சியில்கூட தலையீடு செய்யாமல் நடித்தார். ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படி கதையை மாற்றச் சொன்னால் எப்படி' என்று ரஞ்சித் குழம்பிய சூழ்நிலையில்  திடீரென தனது அடுத்தபட டைரக்டர் என்று 'கொம்பன்' முத்தையாவை அறிவித்தது  ரஞ்சித்துக்கு மனக்கசப்பை உண்டாக்கி விட்டது.

விஜய் கால்ஷீட்டை ஏற்கெனவே வாங்கி வைத்துள்ள பிரபல தயாரிப்பாளர் சமீபத்தில் விஜய்யை சந்தித்து இருக்கிறார். “சார் 'கபாலி' ரஞ்சித்தை உங்களுக்கு ஒரு கதையை ரெடி பண்ணச் சொல்லட்டுமா?' என்று கேட்க ' ஒ.. தாராளமா செய்யச் சொல்லுங்க எனக்கு சந்தோஷம்தான்' என்று உற்சாகமாக தலையாட்டி இருக்கிறார் விஜய். விஜய் ஒ.கே சொன்ன செய்தியை ரஞ்சித்திடம் அந்த தயாரிப்பாளர் சொல்ல குஷியாகி விட்டாராம், ரஞ்சித். தற்போது சூர்யா படத்துக்காக வாங்கி வைத்து இருந்த அட்வான்ஸ் தொகை 20 -லட்சத்தை கொடுத்துவிட்டு 'நோ' சொல்லப் போகிறார். அடுத்து விஜய் படத்தை இயக்க 'எஸ்' சொல்லி அதற்கான வேலைகளில் பரபரப்பாக இறங்கி விட்டார், ரஞ்சித்.  

- சத்யாபதி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close