Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜீத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி... ’தயாரிப்பாளர்’ நயன்தாரா!?

சோஷியல் மீடியாக்களில் விநாடிக்கு ஒரு லைக்கும், நிமிஷத்துக்கு ஒரு கமென்ட்டும் வாங்குவது அஜீத்தின் ஸ்பெஷல். அதேபோல், இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் நடிகராகும் லெவலுக்கு ஏறிப் போக இருக்கிறார் அஜீத். அதுவும், தயாரிப்பாளர் நயன்தாரா கையில்!

நடிகர்கள் தயாரிப்பாளர் ஆவது, பாடகர்கள் நடிப்பது, இயக்குநர்கள் வில்லன் ஆவது - இந்த லிஸ்ட்டில் நயன்தாரா முதன் முதலாக தயாரிப்பாளர் ஆக இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது நயனுக்கு ஆசை. கதையும் ரெடி; தயாரிப்பாளர் நயனும் ரெடி; ஆனால், ‘முதன் முதலாக தயாரிப்பாளர் ஆவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; மாஸ் ஹீரோவாக இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்’ என்பது விக்னேஷின் அனுபவ ஐடியா. ‘அப்படின்னா அஜீத்தைக் கேட்டுப் பார்ப்போம்’ என்று நயன்தாரா மேற்கொண்டு ஓர் ஐடியா கொடுக்க, விக்னேஷுக்கும் மகிழ்ச்சி.

ஆனால், அஜீத் 2018 வரை செம்ம பிஸி! இதற்காக நூதன திட்டம் ஒன்றைக் கையாண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதாவது, சில காமெடி நடிகர்கள் தாண்டி ஹீரோக்களுக்கு மொத்தமாகச் சம்பளம் பேசுவதுதான் சினிமாவில் நடக்கும். அப்படி இல்லாமல், அஜீத்துக்கு நாட்கணக்கில் சம்பளம் பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அஜீத்தை அணுகிய விக்னேஷ், ‘‘சார், என் இயக்கத்தில் நயன்தாரா முதன் முதலா தயாரிப்பாளர் ஆகுறாங்க. நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றாங்க. உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடின்னு சம்பளம் கொடுக்கவும் அவங்க தயார்! 40 நாள் உங்க கால்ஷீட் பிளான் பண்ணியிருக்கோம். அதைத் தாண்டிப் போனாலும் பிரச்னை இல்லை. எக்ஸ்ட்ரா பேமென்ட் பண்ணிடலாம்! உங்களுக்காக வெயிட்டிங்!’’ என்று தனது திட்டத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அஜீத்திடம் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லையாம். ஆனால், ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்று பிடிவாதமாக இருக்கிறாராம் நயன்.

-தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close