Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமலுக்கு செவாலியே.. என்ன சொல்கிறார் கௌதமி?


              
                    

கால்சட்டை பிராயத்தில் இருந்து  கலைத்துறைக்கு சேவையாற்றியமைக்காக கமல்ஹாசனுக்கு ' செவாலியே விருது' கொடுத்து சிறப்பு செய்து இருக்கிறது, பிரான்ஸ். காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வீட்டில் இருந்துவரும் கமலுக்கு செய்தி சொல்லப்பட்டது. அப்போது கமலுடன் கெளதமியும் உடனிருந்தார்.  கமலின் உடல்நலம், செவாலியே விருது குறித்து கெளதமியிடம் பேசினோம்.

' செவாலியே விருது செய்தி  வரும்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். காலில் ஆபரேஷன் செய்துள்ளதால்  நடப்பதற்கான பயிற்சிகளை டாக்டர் கொடுத்த ஆலோசனைகள்படி  மேற்கொண்டு இருந்தார். அப்போதுதான் விருதுக்கான தகவல் வந்தது.  விருதுகள்  பட்டியலில் இவரது பெயர் அறிவிக்கும்போது எப்போதுமே எந்தவித ரியாக்‌ஷனையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். அதுபோலத்தான் செவாலியே விருது செய்தி வந்தபோதும் பணிவோடு  நடந்து கொண்டார்.

இந்த விருது அவருக்கு மட்டுமே சொந்தமானது.  ஏதோ ஒரு துறையில் சாதனை புரிந்தமைக்காக  செவாலியே விருதை உடனே தூக்கி கொடுத்துவிட மாட்டார்கள். நீண்டகாலமாக  ஒரு மனிதர்  முழுமுழுக்க தன் வாழ்நாளில் ஒவ்வொரு செயல்பாட்டிலும்  கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்தவர்களை ஆராய்ந்து, கண்டுபிடிக்கிறார்கள். பிரான்சில் இருக்கும் விருது தேர்வுக் குழு, பலருடன் கலந்து ஆலோசித்து விருது பெறுபவரின்  முழுத்தகுதி, திறமை அவர்கள் கலைத்துறையில் செய்த சாதனைகள் என்று பட்டியலிட்டு பார்த்து வியந்த பிறகே செவாலியே விருதை தருகிறார்கள்.

கமல்சார்  கலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை  இந்திய சினிமா பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது கண்கூடான உண்மை.  சினிமா துறையில்  கமல்சார் நடிப்பில் மட்டுமல்ல, கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், தயாரிப்பு என்று அவர் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை. சினிமா  தொழிலில் முழுக்க முழுக்க ஈடுபாட்டோடு இருக்கிறவர் அதனால்தான் செவாலியே விருது அவரைத்தேடி வந்து இருக்கிறது. கமல்சார்  நடிப்பு திறமைப்பற்றி கமென்ட் செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை. அதுபற்றி கேட்டால் என்னால் பதில் சொல்லவே முடியாது.

எல்லோரும் சிவாஜிசார் வாங்கிய சிறந்த விருது செவாலியே என்று சொல்கிறர்கள். அது தவறு.  உண்மையில் சிவாஜி சாருக்கு செவாலியே விருத தரப்பட்டதால், அந்த விருது தன் தகுதியை அடுத்தகட்டத்துக்கு உயர்த்திக் கொண்டது என்று சொல்வதுதான் சரியான, அப்பட்டமான உண்மை'

இவ்வாறு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கௌதமி.

- எம். குணா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!