Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை.. பாட்ஷா ரிப்பீட்! - க்விக்செவன் #QuickSeven

பாகுபலீஈஈஈஈஈஈ... என்று ஊரெங்கும் முழக்கம் தொடரப்போகிறது, காரணம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  ரிலீஸாகவிருக்கிறது. பாகுபலி நாயகன் பிரபாஸ் பிறந்த நாளன்று படத்தின்  முதல் பார்வை போஸ்டர் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. முதல் பாகத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போஸ்டர்கள் வெளியிட்டது கவனத்தை ஈர்த்தது. பாகுபலி 2 போஸ்டர் எப்படி இருக்கும்? அக்டோபர் 23வரை காத்திருப்போம்! 


மொட்டை ராஜேந்திரன்... படங்களில் தற்போது சென்சார் சர்ட்டிஃபிகேட் இருக்கிறதோ இல்லையோ.. இவர் இருப்பார்!  தற்பொழுது 15க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு இருப்பதாக இன்று போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தார் ராஜேந்திரன். இந்த ட்விட்டர் கணக்கால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றனவாம். அதனால் ராஜேந்திரன் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கை முடக்கவும், சம்பந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை செயல்படவிருக்கிறது.  


த்ரிஷா.... திரையுலகத்திற்கு வந்து கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆகிவிட்டன. மெளனம் பேசியதே படத்தில் தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் நடிப்பால் திரையுலகில் தன்னை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் த்ரிஷாவிற்கு ஒரு குறை இருக்கிறதாம். இத்தனை வருடங்களில் ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறவில்லையாம்.


சிங்கம்... சூர்யா நடிப்பில் சிங்கம் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில் வில்லனாக இந்தி தொலைக்காட்சி நடிகர் அனுப் சிங் நடித்துவருகிறார். அவரும் சூர்யாவும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. இறுதியாக மலேசியாவில் சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு. 


அக்டோபர் 7... ஆயுதபூஜை நாளில் படங்களுக்கு பல்க் புக் பண்ணிடுங்க பாஸ். ஏன்னா அவ்ளோ படம் ரிலீஸாகுது. சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய்சேதுபதியின் ரெக்க, பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தேவி ரிலீஸாகும் நிலையில் கடைசியா ஜி.வி.பிரகாஷின் “கடவுள் இருக்கான் குமாரு” படமும் ரிலீஸாகிறது. படத்துக்குப் போலாமா குமாரு? 


பிரின்ஸ்... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கிறது. இப்படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறாராம். இந்த படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்தக் கட்டமாக சென்னைக்கு வரவிருக்கிறது படக்குழு. மகேஷ்பாபு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


பாட்ஷாடா... இனிமே இப்படித்தான். கபாலிடா ஃபீவர் முடிவடைந்துள்ள நிலையில், ரஜினியின் பாட்ஷா படத்தை டிஜிட்டல் முறையில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ரஜினியின் ஹிட் பட வரிசையில் முக்கியமான படம் பாட்ஷா. சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களை டிஜிட்டலாக்கி வெளியிடும் வரிசையில் ரஜினியின் படமும் உருவாவது குறிப்பிடத்தக்கது. 

-பி.எஸ்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close