Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

த்ரிஷாவா... நயன்தாராவா... ரஜினி - ரஞ்சித் பட ஹீரோயின் யார்?

ரஞ்சித் மட்டுமல்ல... ரஜினி குடும்பத்தில் உள்ள லதா, செளந்தர்யா, ஐஸ்வர்யா, தனுஷ் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த படத்தை இயக்க ரஞ்சித்தையே ரஜினி தேர்ந்தெடுப்பார் என்று. 

எதற்காக ரஞ்சித்தை மீண்டும் தேர்வு செய்தார் ரஜினி? 

' கபாலி' படப்பிடிப்பில் ரஜினியிடம் தான் வேண்டும் பெர்ஃபார்மன்ஸை கேட்டுப் பெற்றதோடு, பிற நடிகர்களையும் ரிகர்சல் வைத்து பெண்டு எடுத்தார் ரஞ்சித். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி யூனிட்டிலேயே ரஞ்சித்துடன் நட்பு பாராட்டத் தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலக... சிவாஜி ராவ் அங்கே தோன்றினார். அதோடு ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ரஞ்சித் வேலை வாங்கிய விதம் ரஜினியை வெகுவாக கவர்ந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அளவுக்கு ரஜினியை ஈர்த்தார், ரஞ்சித். 

 கடந்த ஒரு வருடப் பழக்கத்தில் இருவருக்குள்ளும் கடுகளவுகூட நெருடல் ஏற்படவில்லை. மாறாக, 'தாணு 'கபாலி' க்ளைமாக்ஸ் காட்சியை மாத்தி வெச்சிருக்கோம்னு சொன்னீங்களே... அது வேணாம். டைரக்டர் முன்னாடி எப்படி வெச்சி இருந்தாரோ அப்படியே வையுங்கள்..' என்று அமெரிக்காவிலிருந்து தொலைபேசி மூலம் ரஞ்சித் மீது தான் வைத்திருந்த மதிப்பை தாணுவிடம் வெளிப்படுத்தினார் ரஜினி. இதனாலேயே 2.0-வுக்குப் பிறகான ரஜினி புராஜெக்ட் ரஞ்சித் வசம் சேர்ந்தது

.

இது ஒருபுறமிருக்க, அந்தப் படத்தின் ஹீரோயின் யார்..?


ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் திருமணமான ஒரு நடிகை  பெயர் பேசப்பட்டது. ஆனால், அது இப்போதைய சூழ்நிலையில் தேவையற்ற சர்ச்சை உண்டாக்கும் என்பதால், தவிர்க்கப்பட்டது. அடுத்து 'சந்திரமுகி' வெற்றிக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அது 'சிவாஜி'யிலும் பிரதிபலித்தது. 'கமல், விஜய், அஜித், சூர்யா எல்லோரோடும் நடிச்சுட்டேன். ரஜினி சார்கூட நடிச்சிடனும்!’ என்று பல தருணங்களில் சொல்லிக் கொண்டிருக்கும் த்ரிஷாவும் இப்போது ரஜினி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறாராம்.

விரைவில் நயன்தாராவா... த்ரிஷாவா.. என்ற விடை தெரியும் என்கிறார்கள்!

- சத்யாபதி 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!