Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்த ஊர்ல விஜய், அஜித், சூர்யா யார் யார்?

'அவங்க தான் அந்த ஊரில் இவங்க' என எப்போதும் சில நடிகர்களை கணித்துவிடலாம். அப்படி நம்ம ஊர் ஹீரோக்களுக்கு இணையாக யார் இருக்கிறார்கள் என யோசித்ததில் பளிச்சிட்டன சில முகங்கள். ஒவ்வொருவரும் தேர்வு செய்து நடிக்கும் படங்கள், ரசிகர்கள் இவர்களிடம் எதிர்பார்ப்பது போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் ஒரு சில ஒற்றுமைகள் மட்டும்தான்... கொஞ்சம் படிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்...

 

 

விஜய் - மகேஷ்பாபு,  ஷாரூக்கான்

அச்சு அசல் தெலுங்கில் ஒரு 'இளைய தளபதி' தான் மகேஷ் பாபு. காரணம் விஜய் மகேஷ்பாபுவின் ஒக்கடு, போக்கிரியை ரீமேக் செய்தது கிடையாது. இருவரின் படத்தேர்வுகளும் அவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் என ஒரே ட்ராக்கில் தான் இருவரது பயணமும். அதே போல் தான் ஷாரூக்கானின் பாலிவுட் பயணமும். கிட்டத்தட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் தான் என்றாலும் பாலிவுட்டில் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அமிதாப் பச்சன் வசம். அது போலதான் விஜயும், மகேஷ் பாபுவும் கூட. ஆக்‌ஷன் காமெடி, ரொமான்ஸ் மூன்றிலும் மூவரும் மெர்சல் செய்வார்கள். 

 

 

அஜித் - பவன் கல்யாண், சல்மான்கான்:

ஒரே வார்த்தை தான். மாஸ். ஸ்டைலிஷான ஆக்‌ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் மசாலா என்றால் எழுதி வைத்துக்கொள்ளலாம் படம் ஷூர் ஷாட் என. இன்னொன்று மூவருக்கும் இருக்கும் ஃபேன் ஃபாலோயிங். ஆஞ்சநேயா தொடங்கி வரிசையாக சில அஜித் படங்கள் ஃப்ளாப் ஆன போதும், தொடர்ந்து பல பவன் படங்கள் ஃப்ளாப் ஆன போதும், தபாங் 2 தொடங்கி சல்மானின் சில படங்கள் ஃப்ளாப் ஆன போதும் அவர்களின் ரசிகர்களின் சப்போர்ட் இவர்களின் இமேஜை அப்படியே தக்க வைத்திருந்தது. 

 

 

சூர்யா - ப்ரித்விராஜ், ஆமீர்கான் 

இந்த மூவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளது. சூர்யாவின் தந்தை சிவக்குமார், ப்ரித்விராஜ் தந்தை சுகுமாரன், ஆமீர்கான் தந்தை தஹிர் ஹுசைன் மூன்று பேரும் நடிகர்கள். இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதில் மூவரும் தயக்கம் காட்டியதில்லை. மேலும் அதில் அவர்களின் நடிப்பும் பேசப்படும்படி அமையும். 36 வயதினிலே படம் மூலம் சூர்யாவும், உருமி படம் மூலம் ப்ரித்விராஜும், லகான் மூலம் ஆமீர்கானும் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியவர்கள். கஜினி, மாற்றான், 24 என பரிசோதனை முயற்சி எடுக்கும் சூர்யா, வேல், சிங்கம் என பக்கா கமர்ஷியல்களிலும் நடிப்பார். அது போலவே தான் ப்ரித்விராஜும், ஆமீர்கானும்.

 

 

தனுஷ் -  வினீத் ஸ்ரீனிவசன் 

சினிமா பின்னணியுள்ள குடும்பம், நடிக்க வந்து பெர்ஃபாமராக பெயர் எடுத்தது, பின் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்த புரமோஷன்களை அடைந்திருப்பவர்கள் . தனுஷ் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது போல, வினீத் இயக்குநராக நிவின்பாலியை அறிமுகம் செய்தார். ஒரு சின்ன வித்தியாசம் தான். பவர் பாண்டி மூலம் தனுஷ் தன் முதல் படத்தை இயக்குகிறார், வினீத் ஆனந்தம் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.  

 

 

சிம்பு - அல்லு அர்ஜுன், ரன்பீர் 

செம ஜாலி, கேலி, ரகளை சர்ச்சை என எல்லாவற்றிலும் சேர்த்து இவர்கள் மூவரையும் இணைக்கலாம். நடிகையுடன் காதல், பிரேக் அப் எல்லாம் சிம்பு ரன்பீர் இருவரும் சந்தித்த பிரச்சனைகள் தான், அல்லு அர்ஜுன் காதல் பிரச்சனைகளில் மாட்டவில்லை என்றாலும் பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சைக்குரிய பேச்சு, குடித்துவிட்டு கார் ஓட்டியது என  மாட்டிக் கொள்வார். மூவருக்கும் உள்ள ஒற்றுமை ரொமான்ஸ். சிம்புக்கு ஒரு விடிவி, அல்லுவுக்கு ஒரு ஆர்யா, ரன்பீர்க்கு ஒரு ராக்ஸ்டார் என மூவரும் செம லவ்வர் பாய்ஸ்.

-பா.ஜான்சன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.