Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி ரிலீஸிலிருந்து விலகிய சிம்பு, விஷால் ! காரணம் இது தானா?

திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக முதல் சில நாட்கள் வசூல் தான் நிர்ணயிக்கும். இந்த வருடத்திற்கான இறுதியை நெருங்கிவிட்டோம்.  பெரிய பட்ஜெட் படங்கள் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி தினங்களை குறிவைத்தே வெளியாக தயாராகிவருகிறது. இந்த இரண்டு சிறப்பு தினங்களிலுமே ரஜினி, விஜய், அஜித், கமல் படங்கள் இல்லாவிட்டாலும், அடுத்த ரக ஹீரோக்களின் படங்கள் ரிலீஸூக்காக வெயிட்டிங்.

அக்டோபர் 7ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் “ரெமோ”, விஜய்சேதுபதியின் “றெக்க”, பிரபுதேவா நடிக்கும் “தேவி”, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் “கவலை வேண்டாம்”, மற்றும் தெலுங்கு பிரேமம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன. 

அதுபோல, தீபாவளி விடுமுறையில் கார்த்திக்கின் “கஷ்மோரா”, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “கடவுள் இருக்கான் குமாரு”, தனுஷின் “கொடி” மற்றும் விஜய் ஆண்டனியின் “சைத்தான்” உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.. தவிர, சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” மற்றும் விஷால் “கத்திச்சண்டை” படமும் தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்து, தற்பொழுது தள்ளிப்போகிறது. 

நிறையப் படங்கள் ரிலீஸாவதால் வசூலில் பிரச்னை ஏற்படும் என்பதால் விஷாலின் படம் தள்ளிச்செல்கிறது. அச்சம் என்பது மடமையடா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய கெளதம் மேனன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிகப்படியான படங்கள் ரிலீஸாவதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் சிம்பு, விஷால் படங்கள் தீபாவளி ரிலீஸிலிருந்து விலகிவிட்டன 

அதுமட்டுமின்றி விஷால் படம் ரிலீஸாகும் போது தான் என் படமும் ரிலீஸாகவேண்டும் என்றும்,விஷால்  படத்துடன் தான் மோதுவேன் என்றும் சிம்புகூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

எது எப்படியோ படம் ரிலீஸானா சரிதாம்பா.... 

-பி.எஸ்- 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close