Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தோனியுடன் மோதும் எம்.ஜி.ஆர்! #WeekendMovies

போன வாரம் வெளியான படங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம குஷி தரும் ரிலீஸ் இந்த வாரம் காத்திருக்கிறது...

 

எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி :

கிரிக்கெட்டர் மகேந்திர சிங் தோனி பற்றிய பயோபிக் தான் எம்.எஸ்.தோனி. படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்து படத்துக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. சிறுவயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் வந்ததில் தொடங்கி கேப்டன் மகேந்திர சிங் தோனி வரையிலான தோனியின் கிரிக்கெட் பயணத்தின் செல்லுலாய்ட் பதிவு என்கிறது படக்குழு. தோனி ரோலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார். எ வெட்னஸ் டே, ஸ்பெஷல் 26, பேபி படங்கள் இயக்கிய நீரஜ் பாண்டே படத்தை இயக்கியிருக்கிறார். 

 

கள்ளாட்டம் & கொள்ளிடம் மற்றும் ரிக்‌ஷாகாரன்:

எம்.எஸ்.தோனி இந்த வாரத்தில் பல ஸ்க்ரீன்களை தமிழ், இந்தி என இரு மொழிகளில் ஆக்கிரமித்துக் கொண்டதால் பெரிய தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நந்தா, ரிச்சர்ட், சரிகா, உஷா ஸ்ரீ நடிப்பில் ரமேஷ் இயக்கியிருக்கும் 'கள்ளாட்டம்', நேசம் முரளி இயக்கி நடித்திருக்கும் 'கொள்ளிடம்' போன்ற படங்கள் வெளியாகின்றன. எம்.ஜி.ஆர், மஞ்சுளா, பத்மினி நடித்து 1971ல் வெளியான 'ரிக்‌ஷாகாரன்' டிஜிட்டல் முறையில் திரையிடப்படுகிறது. 

 

ஹைப்பர்: (தெலுங்கு)

கந்திரேகா, ரபஷா படங்களை இயக்கிய சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கும் படம் ஹைப்பர். ராம் போத்தினேனி, சத்யராஜ், ராசி கண்ணா நடித்திருக்கிறார்கள். தந்தை சத்யராஜ் மேல் மிகுந்த பாசமாக இருக்கிறார் மகன் ராம். தந்தைக்கு வரும் ஆபத்தை எப்படி எதிர்த்து ஜெயிக்கிறார் என்பதே கதை. இடையில் காமெடி, ரொமான்ஸ், மானே, தேனே எல்லாம் உண்டு. படத்துக்கு இசை ஜிப்ரான்.

 

சிவாஜி: 

எப்போதும் போல ஜாஸ் சினிமாஸில் திரையாகும் ப்ளே பேக்கில் இந்த வாரம் திரையாகவிருக்கும் படம் சிவாஜி. ஆனா, சோகம் என்னென்னா அதுக்கான டிக்கெட் எல்லாம் புக் ஆகிடுச்சு. நோ டென்ஷன் பாஸ்... அடுத்த வாரம் ரிலீஸ் லிஸ்ட்ல ரெமோ, றெக்க, தேவி, தெலுங்கு பிரேமம்னு செம என்டர்டெயின்மெண்ட் காத்திருக்கு....!

- பா.ஜான்ஸன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close