Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'திருப்பிக் கொடுக்கணும் ப்ரோ..!' தமிழ்ப்பட ஹீரோக்கள் மீது தெலுங்கானா ஆதங்கம்..!

 

 

கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெருமழை பெய்தது. அதுபோலவே சமீபத்தில்  தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருவதால் ஹைதராபாத் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆறு. ஏரி. பகுதிகளை பலர் ஆக்கிரமித்துக் கொண்டதாலேயே சென்னையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் புகுந்து மிகுந்த பொருட்சேதத்தை ஏற்படுத்தியது.


முதலில் கொந்தளித்துக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டன. அதன்பின்  மறைமுகமாக அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். இப்போது தெலுங்கானாவில், ஹைதராபாத் பகுதிகளில் ஓடும் ஆறுகளில் ஆக்கிரமித்த வீடுகள், ஏரிகளை ஆக்கிரமித்த தொழிற்சாலைகள், குளங்களில் கட்டியுள்ள வீடுகள் உடனடியாக இடித்துத்தள்ள அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்.

 
                                       முக்கியமாக 'எனது தெலுங்கானா  ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொறுப்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என்று யார் ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டியிருந்தாலும் என் அனுமதிக்காக காத்துக் கொண்டு இருக்காதீர்கள் கண்ணைமூடிக்கொண்டு அந்த கட்டிடத்தை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டம் ஆக்குங்கள். இன்னொருமுறை தெலுங்கானா பூமியில்  மழை வெள்ளம் வந்தால் அந்த தண்ணீர் ஆறு, ஏரி, களங்களில் மட்டுமே இருக்க வேண்டும்' என்று கடுமையான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார், தெலுங்கனா முதல்வர் சந்திரசேகரராவ்.


 சென்னையில் வெள்ளம் வந்தபோது தெலுங்கு சினிமா ஹீரோக்கள் வெள்ள நிவாரண நிதியாக லட்சம் லட்சமாக தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள் படங்கள் தெலுங்கானா  மாநிலத்தில் நல்ல வியாபாரம் நடக்கிறது. அதன்மூலம் இங்குள்ள ஹீரோக்கள்  கோடிகளில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள். ஹைதராபாத் வெள்ளக்காடாக மிதந்து நிர்கதியாக நிற்கும்  இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களை கண்டுகொள்ளவில்லையே என்கிற கோபத்தில் தெலுங்கானா மக்கள் கொந்தளிக்கின்றனர்.  


 

தங்களை தலைமேல் வைத்து கொண்டாடி கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த  ரசிகர்களின் வீடுகள் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அப்போது அதைத் துளிகூட கண்டுகொள்ளாமல், நிவாரணம் செய்யாமல், ஆறுதல் சொல்லாமல் , உதவி செய்யாமல் ஓடி ஒளிந்து கிடந்த வீராதி வீரர்கள்தான்  நம்ம ஊர் தமிழ்பட ஹீரோக்கள் என்கிற உண்மை தெலுங்கானா மக்களுக்கு தெரியாது போலிருக்கிறது. 

-சினிமாக்காரன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close