Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வராகவனின் வித்தியாசமான கதையில் விஜய்..!

 

விஜயின் 'பைரவா' படத்தை எப்படியும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் தீவிரமாக இருக்கிறது படக்குழு.  ஏற்கனவே விஜய்யை வைத்து  இயக்கிய 'அழகிய தமிழ்மகன்' தோல்வி அடைந்ததால் 'பைரவா' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக செதுக்கி  வருகிறார், பரதன். ரஜினி சென்டிமென்ட்டாக   ராஜமுந்திர் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய   'தர்மதுரை', 'மாப்பிள்ளை' படங்கள்  சூப்பர் ஹிட். அதே ரூட்டில் ராஜமுந்திரில் 'பைரவா' ஷூட்டிங்கை நடத்தி இருக்கிறார், விஜய்.

 ஏற்கெனவே 'கத்தி' படத்தில் தன்னுடன் நடித்த  காமெடி நடிகர் சதீஷூக்கு 'பைரவா'வில் முக்கியமான கதாபாத்திரத்தை பரதனிடம் இருந்து விஜய் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். விஜய்க்கும், கீர்த்தி சுரேஷூக்கும்  இந்த படத்தில் கெமிஸ்டரி, ஜியாக்ரபி எல்லாம்  அநியாயத்துக்கு பொருந்தி இருப்பதால் அடுத்த படத்திலும் கீர்த்திக்கே நாயகி சான்ஸ் அடிக்கும் என்று இப்போதே ஆரூடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிவாஜி இருந்த காலந்தொட்டு இப்போது வரை எப்போதுமே விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக  சிவாஜியின் அன்னை இல்லத்தில் கொண்டாடுவது வழக்கம் .கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று தன் வீட்டுக்கு வருமாறு விஜய்யை பிரபு அழைத்து இருந்தார்.  யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென காரில் வந்து இறங்கினார், விஜய். அன்னை இல்லத்தில் விளக்கேற்றப்பட்டு இருந்த  கம்பீரமான #சிவாஜி படத்துக்கு முன்னால் நின்று அவரை வணங்கினார், விஜய். அதன்பின் சிவாஜி குடும்பத்தினரை பார்த்து கும்பிட்டு ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்தார். ஸ்பெஷலாக செய்து வைத்திருந்த கொழுக்கட்டையை பிரபு குடும்பத்தினருடன் சாப்பிட்டார். பிரபுவின்  மகன் விக்ரம் பிரபுவை ஸ்பெஷலாக நடிப்பு குறித்து அளவளாவினார். 

 விஜய் வருகைக்காக அன்னை இல்லத்தில்  காத்திருந்த இயக்குனர் செல்வராகவனை  அவரிடம் பிரபு சம்பிரதாயமாக அறிமுகம் செய்தார். 'இன்னிக்கு நல்ல நாளா இருக்கேன்னு உங்களுக்கு கதை சொல்ல நான்தான் வரச்சொன்னேன்.' என்ற பிரபு தொடர்ந்து 'செல்வா நீங்க தம்பி விஜய்க்கு  தனியா போய்  அந்த அறையில் போய் கதை சொல்லுங்க' என்று இருவரையும் அனுப்பி வைத்தார். நீண்டநேரம் செல்வராகவன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து இருந்தது. கதையின் செகண்ட் ஆப் திரைக்கதையை மட்டும் மாற்றி அமைத்தால் நல்லா இருக்கும் சரி பண்ணிட்டு வாங்க மறுபடியும் சந்திப்போம்' என்று விஜய் சொல்லச் சொல்ல இயக்குனர் செல்வராகவன், தயாரிப்பாளர் பிரபு இருவர் முகத்திலும் ஆயிரம் வோல்ட் வெளிச்சம். இதுகுறித்து செல்வராகவனின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம் கேட்டோம், ' 'சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு செல்வா சென்றதும் உண்மை. விஜய்யை சந்தித்து பேசியதும் உண்மை '' என்று ஒப்புக்கொண்டார். 


- சத்யாபதி 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்