Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

" அது கஷ்டமா இல்லைன்னா, எல்லோருமே செஞ்சிடுவாங்களே!” - டாம் ஹாங்க்ஸ் ஸ்பெஷல்

" அது கஷ்டமா இல்லைன்னா, எல்லோருமே செஞ்சிடுவாங்களே! ஸ்பெஷலே அது கஷ்டமான வேலை என்பதுதான்..."  - டாம் ஹாங்க்ஸ்

 

    கடினமான, கஷ்டமான விஷயங்களைத் தேடிச் சென்று செய்து, சாதித்து காட்டுவது டாம் ஹாங்க்ஸ் ஸ்டைல். டாம் ஹாங்க்ஸ் ஹாலிவுட்டின் எந்த "சூப்பர் ஹீரோ" படத்திலும் நடித்ததில்லை... ஆனால், அவரின் நடிப்புப் பாதை அவரை ஹாலிவுட்டின் நிஜ "சூப்பர் ஹீரோ"வாக வெளிக்காட்டுகிறது. அவரின் சமீபத்திய படங்கள் "சல்லி" மற்றும் "இன்ஃபெர்னோ". உலகம் போற்றிய அவரின் பல படங்களில்... சில படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக: 

பிக் (BIG) 1988 :

12 வயது ஜோஷ், தான் பெரியவனாக வேண்டும் என ஒரு இயந்திரத்திடம் கேட்கிறான். காலை எழும்பொழுது 30 வயது இளைஞனாக எழுகிறான். 12 வயது மனதுடன், 30 வயது உடலுடன் அவன் செய்யும் சேட்டைகள், காமெடி கலாட்டக்கள் எனத் தொடங்கும் படம், இறுதியில் ஒரு ஆழமான உணர்வினை விட்டுச் செல்லும். இன்று ஹாலிவுட்டில் இது போன்ற கதையம்சத்தில் பல படங்கள் வந்திருந்தாலும்... முதல் படம் இது தான். அதுவரை சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்திருந்த டாம் ஹாங்க்ஸை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியது "பிக்". தான் நடிக்கும் காட்சிகளில், 12 வயது ஜோஷாக நடித்த டேவிட் என்ற சிறுவனை ஒரு முறை நடிக்க வைத்து... அவன் உடல் மொழியை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் டாம். டாமின் ஹிட் வரலாறு இதிலிருந்து தொடங்குகிறது. 

 

லீக் ஆஃப் தெயர் ஓன் (LEAGUE OF THEIR OWN) 1992:

இரண்டாம் உலகப் போரில் ஆண்களெல்லாம் போரில் ஈடுபட்டிருக்க... பெண்களைக் கொண்டு ஒரு பேஸ்பால் டீம் உருவாக்கப்படுகிறது. அதற்கு மேனேஜராக வருகிறார் டாம் ஹாங்க்ஸ். குடிகாரர், கோபக்காரர் என கடுமையாக நடந்து கொள்கிறார். அவருக்கும், அந்த டீமிற்கும் இடையிலான விஷயங்களை உணர்வுப் பூர்வமாக பேசியது இந்தப் படம். சக் தே இந்தியா, இறுதிச் சுற்று என இன்றளவும் உலகில் உருவாகும் பல விளையாட்டுத் திரைப்படங்களுக்கு விதையாக அமைந்தது "லீக் ஆஃப் தெயர் ஓன்". 100 டிகிரி வெயிலில் மொத்த படக் குழுவும் சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம், டாம் ஹாங்க்ஸ் தன் விளையாட்டுத்தனங்கள் மூலம் அவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியதை, இன்றளவும் படக் குழு நினைவு கூர்கிறது. 

 

ஃபிலடெல்ஃபியா (PHILADELPHIA) 1993: 

சமூக புறக்கணிப்பு, சமூக வெறுப்பு என இன்றளவும் ஓரினச் சேர்க்கையாளர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் பல மன வலிகளை சுமந்து கொண்டுதானிருக்கின்றனர். அவர்களின் வலிகளை... உணர்வுகளை மெய்யின் அருகாமையில் பதிவு செய்தது ஃபிலடெல்ஃபியா. ஓரினச் சேர்க்கையாளரக இருக்கும் வழக்கறிஞர் டாம் ஹாங்க்ஸிற்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் தாக்குகிறது. தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதற்கு எதிராக அவர் நடத்தும் சட்டப் போராட்டம் தான் படத்தின் நாடி. அமெரிக்காவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான பார்வையை மாற்ற வைத்ததில் இப்படத்திற்கு பெரும் பங்கு உண்டு. ஒரு சமூக மாற்றத்திற்கான விதையிட்ட இந்தப் படத்தின் நடிப்பிற்காக டாம் ஹாங்க்ஸிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 

 

ஃபாரஸ்ட் கம்ப் (FORREST GUMP) 1994 : 

பிறருக்கு தீங்கு நினைக்கத் தெரியாத நல் உள்ளம்... கொஞ்சம் அப்பாவி. அந்தந்த  நொடிகளில், வாழ்வை அதன் போக்கில் வாழும் உண்மையான ஆத்மா ஃபாரஸ்ட் கம்ப். 1944யில் இருந்து 1982 வரையிலான காலகட்டங்களில் அவன் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் களம். ஒரு தனிமனிதனின் கதையை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் அரசியல் மாற்றங்கள், போர் பாதிப்புகள், நட்பு, காதல், துரோகம், வலி, கண்ணீர், தனிமை என பல உணர்வுகளை அதன் போக்கிலேயே சொன்னது இந்தப் படத்தின் சிறப்பம்சம். இந்தப் படத்திற்கும் டாம் ஹாங்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார். 1937யில் ஸ்பென்சர் ட்ரேஸி என்பவர் தொடர்ந்து இரண்டாண்டுகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். அதன் பின், இன்றுவரை 2 முறை தொடர்ந்து ஆஸ்கர் வென்ற நடிகர் டாம் மட்டுமே. 

 

சேவிங் பிரைவேட் ரயான் (SAVING PRIVATE RYAN) 1998:

ஒரு போர்... ஒரு தாய்... அவரின் நான்கு மகன்களில் மூவர் உயிரிழந்திடுகிறார்கள். ஒருவர் மட்டும் எங்கோ உயிரோடு இருக்கிறார். அவரைத் தேடிக் கண்டெடுக்க டாம் ஹாங்க்ஸ் தலைமையிலான ஒரு குழு புறப்படுகிறது. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். போரின் பாதிப்புகளை உரக்கச் சொன்ன இப்படத்திற்காக டாம் ஹாங்க்ஸ் சில நாட்கள் ராணுவ பயிற்சி முகாமில் தங்கியிருந்து பயிற்சி எடுத்துள்ளார். 

 

கேஸ்ட் அவே (CAST AWAY) 2000 :

ஒரு விமான விபத்து, டாம் ஹாங்க்ஸை ஆளில்லா ஒரு தீவில் தனித்து விடுகிறது. நான்கு வருடங்கள் அந்தத் தீலிலேயே அவர் பிழைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் படம். உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் டாம் ஹாங்க்ஸ் மட்டுமே இருப்பார். அவருக்குத் துணையாக ஒரு ஃபுட்பால். முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்குப் பிறகே அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குள் டாம் ஹாங்க்ஸ் தாடி வளர்த்து, உடல் மெலிந்து அந்த கதாபாத்திரத்தை தத்ரூபமாக கொண்டுவந்திருந்தார். 

2009யில் அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. அதை "சல்லி" என்ற விமானி ஒரு ஆற்றில் தரையிறக்கி 155 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாகியிருக்கிறது "சல்லி". பிரபல எழுத்தாளர், டான் பிரெளனின் டாவின்சி கோட் நாவல் வரிசையின் மூன்றாவது பாகமாக வெளிவர இருக்கிறது "இன்ஃபெர்னோ".

இந்தப் படங்கள் அனைத்துமே டாம் ஹாங்ஸின் சாதனைகளுக்கு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. அவரின் திரைப்பயணம் குறித்து எழுத ஒரு புத்தகமே கூட போதாமல் போகலாம். அவரின் ஆரம்பகால தேடலும், உழைப்பும், வெறியும், நடிப்பு மீதான காதலும், 60 வயதாகியும் இன்னும் சற்றும் குறையவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அவரின் சமீப கால வெளியீடுகளான "சல்லி" மற்றும் "இன்ஃபெர்னோ".  

 


- இரா.கலைச்செல்வன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close