Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சிவகார்த்திகேயன் ஏன் அழுதார்.. ரெமோ லாபமா?’ - ’திருப்பூர்’ சுப்ரமணியத்தின் பதில்

 

24 AM ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜாவின் முதல் தயாரிப்பு ரெமோ. அதன் வெற்றிக்காக ஒரு பிரஸ் மீட்டை நடத்தியது ரெமோ டீம். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், எங்களை வேலையை செய்ய விடுங்கள் என அழுதார்.


 கோவை, உதகை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம்  'சிவகார்த்திகேயன் அழுதது ஏன்' ;ரெமோ' படத்தின் வியாபாரம் என்ன ? போன்றவை குறித்து கேட்டோம்,      ''இதுவரை என்னுடைய  சக்தி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆல் இந்தியா அளவில் 631 படங்களை வாங்கி ரிலீஸ் செய்து இருக்கிறேன். ரஜினியின் 'சிவாஜி' படத்துக்கு பிறகு படங்களை விலைக்கு வாங்கி வெளியிடும் வேலையை நிறுத்திக் கொண்டேன். விநியோகஸ்தர்கள்தான் தயாரிப்பாளரை தேடிப்போய் படங்களை பெற்று வெளியிடுவோம்.  எனது 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர் என்னை தேடிவந்து  'என்  படத்தை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னால் அது 'ரெமோ' தயாரிப்பாளர் ராஜா ஒருவர்தான்.  


நான் இப்போது  எந்தப் படத்தையும் விலைக்கு வாங்குவது இல்லை என்று பலமுறை ராஜாவிடம் எடுத்துச் சொன்னேன். அவர் கேட்கவில்லை 'நீங்கள் வாங்கியே ஆகவேண்டும்' என்று சத்தியாக்கிரகம் செய்து என்னிடம் 'ரெமோ' படத்தை விற்றார், ராஜா. அதுமட்டுமல்ல திருச்சியில் அடைக்கலராஜ் என்று  தமிழகத்தில் பிறபகுதிகளுக்கும் நான் சொல்கிற விநியோகஸ்தர்களிடமே 'ரெமோ' படத்தை ராஜா விற்றார். தமிழ்சினிமாவில் முதன்முறையாக புதுவிதமாக 'ரெமோ' படத்தை தயாரிப்பாளரே தேடிப்போய் விற்றது அதியசமான ஒன்று. 'சார்  ரெமோ'பட பட்ஜெட் மிகவும் அதிமாகி விட்டது இந்த படத்துல நல்ல பேரை சம்பாதிக்கணும்னுதான் நானே தேடிவந்து விற்கிறேன்' என்று ராஜா என்னிடம் சொன்னார். 


கோவை, நீலகிரி,  உதகை, ஈரோடு, திருப்பூர், பகுதிகளில் உள்ள நல்ல  தியேட்டர்களில் 'ரெமோ'வை ரிலீஸ் செய்தேன்.  கோவை நகரில் உள்ள பெரிய தியேட்டர்களில் முதல்நாள் முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரை  விடுமுறையக இருந்த எல்லா நாட்களிலும் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது. சிறிய ஊர்களில் 50, 70 ரூபாய்க்கு விற்றனர். இதேபோன்ற  நடைமுறையை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கடைபிடித்தால் கண்டிப்பாக அனைத்து படங்களும் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்கும்.


சிவ கார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தை நான் மினிமம் கியாரன்டிக்கு வாங்கி இருந்தாலும், நான்  வெளியிட்ட  அனைத்து ஊர்களிலும் உள்ள தியேட்டர்களில்  திரையரங்க விகிதாச்சார அடிப்படையில்தான் 'ரெமோ'வை வெளியிட்டேன்.  தமிழகம் முழுக்க 30 கோடி ரூபாய்க்கு 'ரெமோ' படத்தை வியாபாரம் செய்து இருக்கிறார்கள். நிச்சயமாக விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.    

சிவ கார்த்திகேயன் அழுதார் என்று கேள்விப்பட்டு அவருக்கு போன் செய்து விசாரித்தேன். 'வேந்தர் பிலிம்ஸ்' மதன், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம்  புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர். சிவ கார்த்திகேயனோ  இரண்டு மதன்களிடம் இருந்தும் 'நான் அட்வான்ஸ்  பணம் வாங்கவில்லை' என்று மறுக்கிறார். 'எஸ்கேப்' மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கிறார் இரண்டு பேரையும் அழைத்து வைத்து பேசினால்தான் உண்மை நிலை தெரியவரும். அந்த மன உளைச்சலில் இருந்ததால் சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார்.'' என்றார் முடிவாக 


- சத்யாபதி       

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close